Published:Updated:

பெரம்பலூர்: கோபுரக் கலசம், கோயில் பொருள்களை வாரிச்சுருட்டிய கும்பல்! - போலீஸ் தீவிர விசாரணை

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூரில் அம்மன் கோயிலில் கோபுரக் கலசங்களைத் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தது கலசங்களைத் திருடும் கும்பலா அல்லது உண்டியலைக் கொள்ளையடிக்க வந்த கும்பலா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பெரம்பலூர்: கோபுரக் கலசம், கோயில் பொருள்களை வாரிச்சுருட்டிய கும்பல்! - போலீஸ் தீவிர விசாரணை

பெரம்பலூரில் அம்மன் கோயிலில் கோபுரக் கலசங்களைத் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தது கலசங்களைத் திருடும் கும்பலா அல்லது உண்டியலைக் கொள்ளையடிக்க வந்த கும்பலா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சித்தலி கிராமத்தில் நல்லதங்காள் அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இந்நிலையில் இரவு வழக்கம்போல் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதிகாலை கோயிலின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சிலர் மறைந்திருப்பதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் சத்தம் போட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்தம் கேட்டதும், அந்த மர்ம நபர்கள் சுதாரித்துக்கொண்டு கோயிலுக்குப் பின்புறம் உள்ள வயல்வெளியில் குதித்துத் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த ரவி, இது குறித்து கோயில் தர்மகர்த்தா பழனிசாமிக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

உண்டியல் கொள்ளை
உண்டியல் கொள்ளை

பின்னர் பழனிசாமியும் ரவியும் மர்ம நபர்கள் ஓடிய திசையில் சென்று பார்த்தபோது வயற்காட்டில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்கள், கருவறைக் கலசம் ஒன்று, மூலஸ்தான கலசம் ஒன்று, சிறிய அளவிலான ஏழு பித்தளை மணிகள், ஒரு பெரிய பித்தளை மணி, எண்ணெய்க் கிண்ணம் இரண்டு ஆகியவை கிடந்துள்ளன. இந்தப் பொருள்களை தர்மகர்த்தா கோயிலின் மண்டபத்துக்குக் கொண்டு வந்தார்.

பின்னர் குன்னம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். வயற்காட்டில் கிடைத்த பொருள்கள் இங்கு திருடப்பட்டனவா அல்லது வேறு கோயிலில் திருடிடப்பட்டனவா என்கிற கோணத்திலும் போலீஸாரின் விசாரணை செல்கிறது.

பெரம்பலூர் போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் கோயில்களில் தொடர் கைவரிசை காட்டும் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். அதேபோல் இவர்களும் கலசம் திருடும் கும்பலா அல்லது உண்டியலைக் குறிவைத்துக் கொள்ளையடிக்கும் கும்பலா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.