Published:Updated:

`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி!' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி

மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக வங்கியின் பின்பக்கச் சுவரில் உள்ள ஜன்னலை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அத்துடன் மோப்ப நாய் வந்தால் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக சென்ற வழியெங்கும் மிளகாய்ப்பொடியைத் தூவிச் சென்றனர்.த்

கொள்ளை முயற்சி நடந்த வங்கி
கொள்ளை முயற்சி நடந்த வங்கி

தஞ்சாவூர் அருகே இந்தியன் வங்கியில் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து, மோய் நாய் கண்டு பிடித்துவிடக் கூடாது என்பதற்காக மிளகாய்ப் பொடியைத் தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நாய்க்கு மயக்க மருந்து; ரூ.15 லட்சம், 130 சவரன் நகைகள்!' - கோவை கான்ட்ராக்டரை அதிரவைத்த கொள்ளை

தஞ்சாவூர் - திருவையாறு செல்லும் வழியில் உள்ள அம்மன்பேட்டையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த வங்கியில் நேற்று இரவு நடைபெற்ற கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படி என்ன நடந்தது? கொள்ளைச் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரித்தோம். மக்கள் நடமாட்டமும் வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய முக்கிய சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது இந்த வங்கி. இதில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக வங்கியின் பின்பக்கச் சுவரில் உள்ள ஜன்னலை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அத்துடன் மோப்பநாய் வந்தால் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக சென்ற வழியெங்கும் மிளகாய்ப்பொடியைத் தூவிச் சென்றுள்ளனர்.

வங்கி
வங்கி

வங்கி உள்ளே சென்றவர்கள் அங்கிருந்த 6 சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளையும் துண்டித்து உள்ளே புகுந்துள்ளனர். இதையடுத்து பணம், நகை வைக்கப்பட்டிருக்கும் லாக்கருக்கு சென்றுள்ளனர். பின்னர், லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். காலை வழக்கம்போல் வங்கியைத் திறக்க வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியாகி போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

Vikatan

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நடுக்காவிரி போலீஸார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்தையறிந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வங்கிமுன் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீடியாக்கள் பின்பக்கம் ஜன்னல் உடைக்கப்பட்டதை போட்டோ, வீடியோ எடுக்கச் சென்றன. ஆனால், போலீஸாரோ... ``முதலில் எங்கள் விசாரணையை முடித்துக்கொள்கிறோம் அதற்குப் பிறகு நீங்கள் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அனுமதி மறுத்துவிட்டனர்.

விசாரணையின் முடிவில், ``கொள்ளையர்களால் வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் பணமும் நகையும் அப்படியே இருக்கின்றன. ஆகையால், பிரச்னை எதுவும் இல்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்” என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

வங்கி
வங்கி

கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட சக்தி என்ற மோப்ப நாய், அருகில் உள்ள தெருவுக்குச் சென்று சுற்றிக் கொண்டே நின்றுவிட்டது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.