Published:Updated:

``கோயில்ல குத்து விளக்கைக்கூட விட்டுவெக்கலை..!" - திருடர்கள் அட்டகாசம் குறித்துப் புலம்பும் மக்கள்

கோயில்

சாத்தூரில் கோயிலில் வைத்திருந்த குத்து விளக்கு, உண்டியல் பணம், விவசாய டிராக்டர் பேட்டரி உட்பட பல பொருள்களை மர்மநபர்கள்‌ திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``கோயில்ல குத்து விளக்கைக்கூட விட்டுவெக்கலை..!" - திருடர்கள் அட்டகாசம் குறித்துப் புலம்பும் மக்கள்

சாத்தூரில் கோயிலில் வைத்திருந்த குத்து விளக்கு, உண்டியல் பணம், விவசாய டிராக்டர் பேட்டரி உட்பட பல பொருள்களை மர்மநபர்கள்‌ திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கோயில்

சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன், வெற்றி விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோயிலிலிருந்து சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள் பலர் இருமுடிகட்டி கன்னி பூஜை நடத்தினர். இருமுடி பூஜைகள் முடிந்ததையடுத்து கோயில் பூசாரி பால்பாண்டி (வயது 60) கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில், வழக்கம்போல கோயிலை மீண்டும் திறப்பதற்காக பால்பாண்டி வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டுப்போயிருந்தது. மேலும், கோயிலில் இருந்த நான்கு குத்துவிளக்குகள், பூஜைமணி, தட்டு உள்ளிட்ட பூஜைப் பொருள்கள், மின்மோட்டார் உள்ளிட்டவையும், கோயிலுக்கு அருகே நிறுத்தியிருந்த டிராக்டரில் இருந்த பேட்டரியையும் மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

சோதனை
சோதனை

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மோப்பநாய் உதவியுடன் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடிச்சென்ற நாய், அதன் பிறகு நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து, தடயவியல் குழுவினர் வரவழைக்கப்பட்டு, ஆய்வு நடத்தி தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருட்டுச் சம்பவம் தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சாத்தூர் நகர் போலீஸார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் வீடுகளிலும், முக்கிய இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றியும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதி மக்கள், ``கோயில் குத்து விளக்கைக்கூட விட்டுவெக்காம, திருடிட்டுப் போயிருக்காங்க. போலீஸ் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த மாதிரி திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கணும்" என்றனர்.

திருட்டு
திருட்டு

ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும், கடையில் இருந்த மதிப்புமிக்க பொருள்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அதே பாணியில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம், குத்துவிளக்கு, மின்மோட்டார், டிராக்டர் பேட்டரி என அடுத்தடுத்து திருட்டுப்போயிருக்கும் சம்பவம் சாத்தூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.