Published:Updated:

`நாய்க்கு மயக்க மருந்து; ரூ.15 லட்சம், 130 சவரன் நகைகள்!' - கோவை கான்ட்ராக்டரை அதிரவைத்த கொள்ளை

கோவையில், கான்ட்ரக்டர் வீட்டில் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து 130 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 லட்ச ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

பூட்டு
பூட்டு

கோவை இடையர்பாளையம் அப்பாஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் கனகராஜ் (59). தன் மனைவி சசி (50) மற்றும் மகன் பிரவீன் ராஜ் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். பிரவீன் ராஜ் இன்ஜினீயராக தந்தையுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். மகளுக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

கொள்ளை
கொள்ளை

இந்த நிலையில், நேற்று சுமார் 3 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு கோவையிலுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மாலை 7 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் (ஜில்லு) மயங்கிக் கிடந்துள்ளது.

கோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்!

மேலும் முன்பக்க கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதும் அதிலிருந்த செயின், வளையல்,

நாய்
நாய்

நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல்கள், முகப்புத்தோடு, பிரேஸ்லெட் உட்பட 130 சவரன் நகைகள், ரூ.15 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

முக்கியமாக, வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு டி.வி.ஆர் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து துடியலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளை
கொள்ளை

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களைச் சேகரித்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, ``இப்பகுதியில் தொடர்ந்து இதேபோன்று கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கொள்ளை
கொள்ளை

காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத்தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.