Published:Updated:

நகையைத் திருப்பச் சென்ற விவசாயி; 5 நிமிடங்களில் நடந்த அதிர்ச்சி! - வங்கி முன் நடந்த துணிகரச் சம்பவம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பணத்தைப் பறிகொடுத்த விவசாயி திருநாவுக்கரசு
பணத்தைப் பறிகொடுத்த விவசாயி திருநாவுக்கரசு

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன், ``சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைவைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முகம் தெளிவாகத் தெரியவில்லை. துரிதமாக விசாரணை செய்யப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேராவூரணியில் வங்கி ஒன்றில் அடகுவைத்த நகையைத் திருப்புவதற்காக விவசாயி ஒருவர் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றிருக்கிறார். டூ வீலரில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பணம், வண்டியை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று வரக்கூடிய சில நிமிடங்களில் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேராவூரணி போலீஸ் ஸ்டேஷன்
பேராவூரணி போலீஸ் ஸ்டேஷன்

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவநாவுக்கரசு. விவசாயியான இவர், நேற்று முன்தினம் மதியம் பேராவூரணியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகுவைத்திருந்த நகையைத் திருப்புவதற்காக ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற நிலையில், வங்கிக்குள் சென்று வருவதற்குள் அவரின் ஸ்கூட்டி பெப் வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். உடனடியாக காவல் நிலையத்துக்குச் சென்று திருநாவுக்கரசு புகார் கொடுத்திருக்கிறார். மேலும், பணம் திருடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இருக்கும் நிலையில் போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக திருநாவுக்கரசு தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து திருநாவுக்கரசுவிடம் பேசினோம். `எங்க வீட்டுல நடந்த சுப நிகழ்ச்சியில் உறவினர்கள் வைத்த மொய்ப் பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு பேராவூரணியிலுள்ள ஐசிஐசிஐ வங்கியில் அடகுவைத்திருந்த நகையைத் திருப்புவதற்காக சென்றேன். வங்கிக்குச் சென்றதும் நான்கு கட்டுகளாக இருந்த பணத்தைக் கையிலேயே எடுத்துக்கொண்டு வங்கிக்குள் சென்றேன்.

திருட்டு
திருட்டு
representational image

வங்கி நிர்வாகத்தில் `ஆடிட் நடப்பதால் உடனடியாக நகையைத் திருப்ப முடியாது, அடுத்த நாள் வாங்க’ என்று கூறிவிட்டனர். இதையடுத்து வெளியே வந்த நான் பணத்தை என்னுடைய வண்டியில் சீட்டுக்கு அடியில் வைத்து லாக் செய்துவிட்டு எனது நண்பருடன் கிளம்பிவிட்டேன். சிறிது தூரத்திலுள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு நகை திருப்புவது தொடர்பாக ஏற்பட்ட சந்தேகம் ஒன்றைக் கேட்பதற்காக மீண்டும் வங்கிக்குச் சென்று டூ வீலரை முன் பகுதியில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுவிட்டு ஐந்து நிமிடங்களில் வந்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தால் பணத்தைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று பணம் திருடப்பட்டது குறித்து புகார் கொடுத்தேன். வங்கி மற்றும் அதன் அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வாங்கிப் பார்த்தேன். டூ-வீலரில் பணம் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நான் உள்ளே சென்றதும் சீட்டின் லாக்கை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

விவசாயி திருநாவுக்கரசு
விவசாயி திருநாவுக்கரசு

மூன்று பேர் இந்தச் சம்பவத்தைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஒருவன் சிசிடிவி கேமராவை மறைத்தபடி நிற்கிறான். ஒருவன் வங்கியிலிருக்கும் செக்யூரிட்டியின் கவனத்தை திசைதிருப்பியபடி பேசிக்கொண்டிருக்கிறான். மற்றொருவன் டூ வீலரின் லாக்கை உடைத்து சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை எடுக்கிறான். சில நிமிடங்களில் பணத்தைத் திருடிக்கொண்டு அந்த இடத்திலிருந்து அந்த நபர்கள் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்தேன். `அது சரியில்லை, இது சரியில்லை’ என்று ஐந்து முறை புகார் வாங்கிக்கொண்டனர். மனு ரசீது கேட்டேன். தரவில்லை. விசாரிப்பதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து தனிப்படை வருவதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர். பணம் திருடப்பட்டு 30 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. சிசிடிவி காட்சிகள் இருந்தும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை” என்றார்.

கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் பேசினோம். ``சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முகம் தெளிவாகத் தெரியவில்லை. துரிதமாக விசாரணை செய்யப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு