Published:Updated:

சென்னை: 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை; 4 வெளிமாநில ஊழியர்கள் மாயம்! - அதிர்ச்சி சம்பவம்

தங்க நகைகள்
தங்க நகைகள் ( representational image )

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள நகைப்பட்டறையில் வேலைப்பார்த்து வந்த 4 வெளிமாநில ஊழியர்கள், 100 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

சென்னை பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஜூவல்லரி நடத்திவருபவர் கமலேஷ்குமார். இவரின் நகைப்பட்டறை கிண்டி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி இரவு, பகல் என நகை செய்யும் வேலைகள் பட்டறையில் நடந்திருக்கின்றன.

தங்க நகைகள் கொள்ளை
தங்க நகைகள் கொள்ளை
representational image

இந்தநிலையில் நகைப்பட்டைறையில் வேலைப்பார்த்த கொல்கத்தாவைச் சேர்ந்த 4 பேர் திடீரென மாயமாகியிருந்தனர். அதனால் கமலேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நகைப்பட்டைறையில் நகைகளை சோதனை செய்தபோது 100 சவரன் எடையுள்ள தங்க நகைகள் மாயமாகியிருந்தன.

இதையடுத்து நகைப்பட்டறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கமலேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த 4 பேரும் பின்பக்க மதில் சுவர் ஏறிக் குதித்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து பட்டறையின் உரிமையாளர், கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

தங்கம்
தங்கம்
representational image
சென்னை: `250 சவரன் நகைகள்; ரூ. 95 லட்சம் பணம்' -  வயதான  தம்பதியரைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை!

கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ரயில், விமானம் அல்லது லாரிகள் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் போலீஸார் கருதினர். இதையடுத்து போலீஸார், விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். அதில் கொள்ளையர்கள் நடந்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதிகாலை நேரத்தில்தான் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொல்கத்தாவைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளர்கள், கேரளா மற்றும் பெங்களூருவில் உள்ள ஜூவல்லரிகளில் வேலைப்பார்த்திருக்கின்றனர். அவர்கள் திறமையாக நகைகளைச் செய்ததால் இங்கு வேலைக்கு சேர்த்துள்ளார் கமலேஷ்குமார். நகைப்பட்டறை என்பதால் நம்பிக்கை அடிப்படையில்தான் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

CCTV
CCTV
representational image

அந்தவகையில் இந்த 4 பேருக்கும் ஒருவர் சிபாரிசு செய்துள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி 4 பேரின் பின்னணியை விசாரித்து வருகிறோம். தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு செல்லும் 4 பேரையும் விரைவில் பிடித்துவிடுவோம்" என்றனர்.

சென்னை தி.நகரில் சமீபத்தில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் கொள்ளைப்போனது. இந்த வழக்கில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளி சைதாப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சுரேஷின் காதலி கங்காதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோவுக்கு மேல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில்தான் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கிண்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு