Published:Updated:

மகாராஷ்டிர போலீஸ் ஷாக்: பட்டப்பகலில் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டில் புகுந்து ரூ.10.50 லட்சம் கொள்ளை!

சித்தரிப்பு படம்

மகாராஷ்டிராவில் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டிற்குள் இருந்து ரூ.10.50 லட்சம் பட்டப்பகலில் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிர போலீஸ் ஷாக்: பட்டப்பகலில் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டில் புகுந்து ரூ.10.50 லட்சம் கொள்ளை!

மகாராஷ்டிராவில் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டிற்குள் இருந்து ரூ.10.50 லட்சம் பட்டப்பகலில் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Published:Updated:
சித்தரிப்பு படம்

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா அருகில் உள்ள அம்பாட் என்ற இடத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் மதுக்கர் பாட்டீல். அங்குள்ள சார்தா நகரில் வீடு எடுத்து தங்கி பணியாற்றி வந்தார். பாட்டீல் காலையில் பணிக்கு சென்றுவிட்ட நிலையில் அவரின் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்று இருந்தனர். வீட்டில் உள்ளவர்கள் எந்த நேரத்தில் வெளியில் செல்கின்றனர் என்பதை கண்காணித்து வந்த திருடர்கள் சரியான நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பம் வெளியில் சென்றதும் திருடர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த ரூ.8.75 லட்சம் மதிப்பு தங்க ஆபரணங்கள், ரூ.1.80 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம திருடர்கள் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். வெளியில் சென்று இருந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. பணம் மற்றும் நகைகளும் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

திருடர்களை பிடிக்க இன்ஸ்பெக்டரின் வீடு இருக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் வீட்டில் பட்டப்பகலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வங்கியில் லாக்கர் திறப்பு
வங்கியில் லாக்கர் திறப்பு

மகாராஷ்டிரா வங்கியில் ரூ.49 லட்சம் கொள்ளை

மற்றொரு சம்பவம்: மகாராஷ்டிரா வங்கியில் இரவில் புகுந்த கொள்ளையர்கள் 49 லட்சம் மதிப்பு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

லாத்தூரில் மகாராஷ்டிரா கிராமின் வங்கி அங்குள்ள நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் இரவில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் 22 லட்சம் மதிப்பு தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்றனர். காலையில் ஊழியர்கள் வந்த போதுதான் வங்கியின் கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த வங்கியில் பக்கத்தில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கணக்கு வைத்திருக்கின்றனர். கொள்ளை குறித்து வங்கி மேலாளர் சவுரப் கெய்ரே போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.