Published:Updated:

`உடைக்கப்படாத பூட்டு; பல நாள்கள் பிளான்!'- சீர்காழி கோயிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்

ஐம்பொன் சிலைகள் திருட்டு
ஐம்பொன் சிலைகள் திருட்டு

இந்த ஆலயத்தின் அர்ச்சகராக நடராஜ் குருக்கள் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு கோயில் பூஜைகளை முடித்து நடராஜ் குருக்கள் கோயிலைப் பூட்டிச் சென்றுள்ளார்.

கொண்டல் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கோயிலில் 3 ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்றது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐம்பொன் சிலைகள் திருட்டு
ஐம்பொன் சிலைகள் திருட்டு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த ஸ்ரீகுமார சுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அர்ச்சகராக நடராஜ் குருக்கள் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கோயில் பூஜைகளை முடித்து நடராஜ் குருக்கள் கோயிலைப் பூட்டிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை கோயிலைத் திறக்க வந்தபோது கோயிலின் பூட்டு திறந்தே இருந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜ் குருக்கள் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஶ்ரீ குமாரசுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

ஐம்பொன் சிலைகள் திருட்டு
ஐம்பொன் சிலைகள் திருட்டு

இது குறித்து சீர்காழி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயில் பூட்டுகள் உடைக்கப்படாமல், கள்ளச் சாவிகள் மூலம் திறக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்டுள்ளன. எனவே, பல நாள்கள் திட்டமிட்டே கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு