Published:Updated:

நீட் விவகாரம்: `கதறி அழுத மருத்துவ மாணவி!' - பூட்டப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலத்தில் விசாரணை

சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
News
சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்துக்காக இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் ஒரு மருத்துவ மாணவியைத் தேனி அழைத்துவந்து விசாரணை செய்து வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற உதித்சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன், சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் படித்த ராகுல், அவரின் தந்தை டேவிஸ், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் படித்த பிரவீன், அவரின் தந்தை சரவணன். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த இர்ஃபான், அவரின் தந்தை முகமது சஃபி என இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு உதவிய நீட் ஏஜென்ட் ரஷித் என்பவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஒரு மருத்துவ மாணவியைத் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

காஞ்சிபுரம் சவீதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா என்பவரை இன்று அதிகாலை, தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். இவரின் தந்தை வழக்கறிஞர் எனக் கூறப்படுகிறது. பிரியங்காவின் தாயாரும் அழைத்துவரப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்றுவருகிறது. மாணவி பிரியங்கா, சத்தமிட்டு அழுததால்,சி.பி.சி.ஐ.டி அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. பூட்டிய அலுவலகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz