Published:Updated:

தேனி: `காய்கறிப்பையில் புலிநகம், யானைத் தந்தம், மான்கொம்பு!’- சிக்கிய சித்த மருத்துவர்

சித்த மருத்துவர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை
சித்த மருத்துவர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை

தேனி அருகே வீட்டில் மான்கொம்பு, யானைத் தந்தம், புலிநகம் போன்றவற்றை வைத்திருந்த குற்றத்துக்காக சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மூணாறு: நீரோடையில் தேடும் பணி; குறுக்கிட்ட புலி! - அதிர்ச்சியில் மீட்புக்குழுவினர்

தேனி மாவட்டம், கூடலூர் கரணம் பழனிவேல்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் நந்தகோபாலன் (வயது 42). இவரது வீட்டில் மான்கொம்பு, யானைத் தந்தம் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாக கம்பம் கிழக்கு வனத்துறை ரேஞ்சர் அருண்குமாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிரடியாக நந்தகோபாலன் வீட்டுக்குச் சென்ற வனத்துறையினர் சோதனை செய்தனர்.

காய்கறிப்பையில் இருந்த யானைத் தந்தம், புலிநகம் உள்ளிட்டவை.
காய்கறிப்பையில் இருந்த யானைத் தந்தம், புலிநகம் உள்ளிட்டவை.

அப்போது, வீட்டின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த காய்கறிப்பையில் இருந்த இரண்டு ஜோடி மான்கொம்புகள், சிறிய யானைத் தந்தம் ஒன்று, இரண்டு புலிநகங்கள், மயில் தோகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். நந்தகோபாலன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனி: `மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!’ - குவியும் பாராட்டுகள்

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``புலி நகம், யானைத் தந்தம், மான் கொம்பு ஆகியவை இந்த சித்த மருத்துவருக்கு எப்படிக் கிடைத்தது என விசாரித்துவருகிறோம். யார் இவற்றைக் கொடுத்தது, இதற்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்” என்றனர்.

நந்தகோபாலன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை
நந்தகோபாலன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை
பட்டு வளர்ப்பில் தமிழக அளவில் இரண்டாவது இடம்... சாதித்த தேனி!

சித்த மருத்துவர் இந்தப் பொருள்களை விற்கும் ஏஜென்ட்டாகச் செயல்பட்டாரா என்ற கோணத்தில் வனத்துறை விசாரித்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், புலிநகங்கள், யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், இவை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள வன விலங்குகளை வேட்டையாடி எடுத்துவரப்பட்டவையா என்று வனத்துறையினர் விசாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம், தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு