Published:Updated:

அமெரிக்க ராணுவம் சிரியாவிடம் கைப்பற்றிய தொகையில் ரூ.5 கோடி தருவதாக மோசடி! - தேனியில் நடந்தது என்ன?

சைபர் க்ரைம்

சிரியா நாட்டின் மீது அமெரிக்கப் படை நடத்திய ஒரு மீட்புப் பணியின்போது, சிரியா கலவரக்காரர்களிடமிருந்து பெரும் தொகையை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது. அந்தப் பணம் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படவிருக்கிறது.

அமெரிக்க ராணுவம் சிரியாவிடம் கைப்பற்றிய தொகையில் ரூ.5 கோடி தருவதாக மோசடி! - தேனியில் நடந்தது என்ன?

சிரியா நாட்டின் மீது அமெரிக்கப் படை நடத்திய ஒரு மீட்புப் பணியின்போது, சிரியா கலவரக்காரர்களிடமிருந்து பெரும் தொகையை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது. அந்தப் பணம் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படவிருக்கிறது.

Published:Updated:
சைபர் க்ரைம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சமையல் கலை படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலுள்ள ஸ்டார் ஹோட்டலில் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் வசித்துவருகிறார்.

பெரியகுளம் காவல் நிலையம்
பெரியகுளம் காவல் நிலையம்

இவர் தன் அக்காள் மகன் அஜீகண்ணன் என்பவருடைய ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்திவந்திருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த ஃபேஸ்புக் கணக்கில், எமிலி ஜோன்ஸ் என்ற பெண்ணின் பெயரில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் போன் நம்பரைக் குறிப்பிட்டு தன்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது. இதையடுத்து முருகானந்தம் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து அந்தப் பெண் கூறிய வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்புகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்தப் பெண், `நான் அமெரிக்க ராணுவத்தில் நர்ஸாகப் பணியாற்றிவருகிறேன். சிரியா நாட்டின் மீது அமெரிக்கப் படை நடத்திய ஒரு மீட்புப்பணியின்போது, சிரியா கலவரக்காரர்களிடமிருந்து பெரும் தொகையை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது. அந்தப் பணத்தை தங்கள் நாட்டின் வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது என்பதால் அமெரிக்க ராணுவம் அந்தப் பணத்தை ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கே பகிர்ந்தளிக்கவிருக்கிறது.

மோசடி
மோசடி

மேலும், அமெரிக்க ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றும் என்னுடைய பங்காக பதினைந்தரை கோடி ரூபாய் கிடைக்கும்’ என்றும், `அந்தப் பணத்தை என்னால் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதால் யாரிடமாவது கொடுத்து, பாதுகாப்பாக வைக்க விரும்புகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்தால் 30 சதவிகிதம் அதாவது நான்கரைக் கோடி ரூபாயை கமிஷனாக கொடுக்கிறேன். விருப்பமிருந்தால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய முருகானந்தம் அந்தப் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்புக்கொண்டார்.

தேனி
தேனி

இதையடுத்து, அந்தப் பெண், முருகானந்தத்தின் விவரங்களைப் பெற்றுக்கொண்டு, ஏஜென்சி மூலம் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதாகத் கூறினார். இதையடுத்து, முருகானந்தம் செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர் பேசினார். அந்த நபர், எமிலி ஜோன்ஸ் என்ற பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதற்கு சுங்கத்துறை பரிசீலனை, தடையில்லாச் சான்று போன்றவை பெறுவதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவர் கேட்ட தொகையை முருகானந்தம் அனுப்பிவைத்திருக்கிறார்.

பிறகு அந்தப் பணத்தை அவருடைய வங்கிக் கணக்கில் அனுப்புவது, அதற்கு இந்தப் பணம் பயங்கரவாதத் தொடர்பு எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் பெறுதல் போன்ற பல காரணங்களைக் கூறி வெவ்வேறு எண்களிலிருந்து முருகானந்தத்துக்கு அழைப்புகள் வந்தன. அதை நம்பிய அவரும் பல தவணையாக கேட்ட நபர்களுக்கெல்லாம் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பிவந்தார். அந்த வகையில் ரூ.36.31,16 செலுத்தினார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் மேலும் பல காரணங்களைக் கூறி தொடர்ச்சியாகப் பணம் கேட்டுள்ளனர்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

அப்போதுதான் முருகானந்தம் தன்னை ஏமாற்றி ஒரு கும்பல் பணம் பறிப்பதை உணர்ந்திருக்கிறார். இதையடுத்து தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்து, மோசடி நபர்கள் தொடர்பு கொண்ட ஐந்து செல்போன் எண்கள், அவர்கள் பயன்படுத்திய 13 வங்கிக் கணக்கு எண்களை வைத்து சைபர் க்ரைம் போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism