Published:Updated:

தேனி: `ரூ.60 செல்போன் கவரை 20 ரூபாய்க்குக் கொடுங்க!’- பேரத்தால் கடைக்காரருக்கு நேர்ந்த சோகம்

படுகாயமடைந்த விக்ரம்
படுகாயமடைந்த விக்ரம்

செல்போன் கவர் வாங்க வந்த இரண்டு இளைஞர்கள், பேரம் பேசியதால் ஏற்பட்ட தகராறில், செல்போன் கடையருகே ஃபேன்ஸி ஸ்டோர் வைத்திருந்த நபரின் தலையில் இரும்புக்கொக்கியால் வெட்டினர்.

தேனி நகர், கடற்கரை நாடார் தெருவில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனைக் கடை வைத்திருக்கிறார் பகட்ராம் பல்தேவ். ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பல்தேவ் உட்பட சிலர், கடந்த சில வருடங்களாக தேனி நகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகள் வைத்து நடத்திவருகின்றனர். இந்தநிலையில், நேற்று (15.10.2020) இரவு இரண்டு இளைஞர்கள், பல்தேவின் கடைக்கு வந்திருக்கிறார்கள். தங்களுடைய செல்போனுக்கு கவர் கேட்டிருக்கிறார்கள். அதை எடுத்துக்கொடுத்திருக்கிறார் பல்தேவ்.

படுகாயமடைந்த விக்ரம்.
படுகாயமடைந்த விக்ரம்.
`வெடிவாழை நோய்க்கு ஹோமியோபதி மருந்து!' விவசாயிகளுக்கு தெம்பூட்டும் தேனி மருத்துவர்

இளைஞர்கள் விலையைக் கேட்க, ஒரு செல்போன் கவர் ரூ.60 என கூறியிருக்கிறார் பல்தேவ். அதை ரூ.20-க்கு கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். `இவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியாது’ எனக் கூறியிருக்கிறார் பல்தேவ். பேரம் பேசிய இளைஞர்கள், பல்தேவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், பல்தேவின் கடையருகே ஃபேன்ஸி ஸ்டோர் கடை வைத்திருக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம் என்பவரை அழைத்திருக்கிறார் பல்தேவ். இளைஞர்களிடம் விக்ரம் சமாதானம் பேச, அதை ஏற்காத இளைஞர்களுக்கும் விக்ரமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் மூவருக்கும் கைகலப்பு ஏற்படவே, இளைஞர்களில் ஒருவர், தன்னிடம் வைத்திருந்த, மூட்டைகளைத் தூக்கப் பயன்படும் இரும்பால் ஆன கூர்மையான கொக்கியை எடுத்து விக்ரமின் தலையில் தாக்கியிருக்கிறார்.

படுகாயமடைந்த விக்ரம்.
படுகாயமடைந்த விக்ரம்.
`கிராமத்திலும் இப்போ பேபி போட்டோகிராபி ஹிட்!' - பேபி போட்டோகிராபர் தேனி சாந்தினி

இதில், விக்ரமின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே, இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். விக்ரமை மீட்ட அவருடைய நண்பர்கள், அவரை கானா விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்தச் சம்பவவத்தை அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தேனி நகர் போலீஸார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியைவைத்து, இளைஞர்களைத் தேடிவருகின்றனர்.

செல்போன் கவரை விலை குறைவாகக் கேட்ட விவகாரம், ஒருவரின் தலையை பதம்பார்க்கும் வரை செனறிருப்பது, அந்தப் பகுதியில் கடைவைத்து நடத்துபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு