Published:Updated:

வாட்ஸ்அப் குழு அமைத்து போதை ஊசி விற்பனை! - தேனியில் 36 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை

வாட்ஸ்அப் குழு அமைத்து போதை ஊசி விற்பனை

தேனியில் போதை ஊசி பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்ததது தொடர்பாக தனிப்படை போலீஸார் ஒரு பெண் உட்பட 6 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

வாட்ஸ்அப் குழு அமைத்து போதை ஊசி விற்பனை! - தேனியில் 36 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை

தேனியில் போதை ஊசி பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்ததது தொடர்பாக தனிப்படை போலீஸார் ஒரு பெண் உட்பட 6 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
வாட்ஸ்அப் குழு அமைத்து போதை ஊசி விற்பனை

தேனியில் போதை ஊசி பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்ததது தொடர்பாக தனிப்படை போலீஸார் ஒரு பெண் உட்பட 6 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர். மருத்துவத்துறையில் வரைமுறைபடுத்தப்பட்டு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தப்படும் மருந்துகள் போதைக்காக பயன்படுத்த பாண்டிச்சேரி, கேரளா, சென்னை, ஒசூர், கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பெருமளவில் விற்பனைக்கு சென்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போதை ஊசி
போதை ஊசி

இது குறித்து தேனி மாவட்ட போலீஸாரிடம் விசாரித்தோம். திருச்சியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ​ஜோனத்தன்மார்க், பிஸ்லி பார்மா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் புதுக்கோட்டையைச் சேர்ந்த வினோதினி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்தும் ஒரு வகை ஊக்கமருந்தை க்ரீன், பிங்க், ஆரஞ்ச் என்ற குறியீடுகளை பயன்படுத்தி புனே, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்திருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மருந்து 10 எம்.எல் கொண்ட பாட்டிலில் கிடைக்கிறது. ஒரு பாட்டிலை 250 ரூபாய்க்கு வாங்கி, அதை 450 ரூபாய்க்கு ஜோனத்தன்மார்க் விற்பனை செய்திருக்கிறார். கேரளா, பாண்டிசேரியில் என பல்வேறு பகுதிகளில் தன்னுடைய வாடிக்கையாளர்களை இணைக்க வாட்ஸ்அப் குழு அமைத்து அவர்களிடமிருந்து ஆர்டர் வாங்கும் பொறுப்பையும், கூகுள் பே மூலம் பணம் வசூலிக்கும் பொறுப்பையும் வினோதினி கவனித்து வந்திருக்கிறார். இந்த வாட்ஸ்அப் குழுவில் மட்டும் சுமார் 500 பேர் வாடிக்கையாளர்களாக இணைந்திருக்கின்றனர். அவர்களுக்கு கீழ் பல்வேறு குழுக்கள் மூலம் போதை ஊசி வியாபாரம் நடந்து வருகிறது.

 கைது
கைது

மருந்து பொருள்களை பில் இல்லாமல் பார்சல் அனுப்பினால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக தன்னுடைய உறவினர்களுக்கு அவரசமாக மருந்து தேவைப்படுகிறது எனவும், முக்கியமான பார்சலை மறந்துவிட்டுச் சென்றவிட்டார்கள் அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என தனியார் பேருந்து ஓட்டுநர்களிடம் பணத்தைக் கொடுத்து மருந்து அனுப்ப வேண்டிய ஊர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப் பேருந்து எண்ணையும் என்ன நேரத்துக்கு ரீச் ஆகும் என்பதை மட்டும் கூறிவிட்டால் சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் பார்சலை பெற்றுக்கொள்வார்கள்.

இதையடுத்து ஒரு பாட்டிலை ஒரே நபருக்கு விற்காமல் ஒவ்வொரு எம்எல்-ஆக ஊசியில் ஏற்றி விற்பனை செய்திருக்கின்றனர். ஒரு எம்.எல் மருந்தை 600 ரூபாய்க்கு விற்று ஒரு பாட்டிலை வைத்து ஆறாயிரம் ரூபாய் வரை லாபம் பார்த்திருக்கின்றனர். ஒரு நபர் ஒரு எம்.எல் மருந்தை உடலில் ஏற்றினால் 10 முதல் 12 மணி நேரத்துக்கு போதை இருக்கும். இந்த மருந்தை பெரும்பாலும் கல்லூரி இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமது மீரான், மாணிக்கம் ஆகியோர் இந்த ஊசியைப் பயன்படுத்தியதை கண்டறிந்து, அவர்கள் சின்னமனூரைச் சேர்ந்த தங்கேஸ்வரன், சரவணக்குமார் ஆகியோரிடமிருந்து வாங்கியதை அறிந்தோம். அவர்கள் மூலம் ஜோனத்தன்மார்க்கையும் அவர் உதவியாளர் வினோதினியையும் பிடித்தோம். தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 11 பாட்டில்கள் மருந்தையும், ஜோனத்தன்மார்க்கிடம் 89 பாட்டில்கள் மருந்தையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இன்று காலை சட்டவிரோதமாக மருந்து விற்பனை செய்த மதுரை மருந்து கம்பெனி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஜோனத்தன்மார்க் தொடர்பில் இருந்த புனே, சென்னையைச் சேர்ந்த மருந்து கம்பெனிகளை தேடி தனிப்படை விரைந்திருக்கிறது. மேலும் தேனியில் போதை ஊசி பயன்படுத்திய 36 இளைஞர்களைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

தேனி அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதனிடம் பேசினோம். ``ஊக்க மருந்து பிசிக்கலி, மெண்டலி என இருவகைகளில் பயன்படுத்தலாம். ஒரு சில விளையாட்டு வீரர்கள் பிசிக்கல் வகை ஊக்க மருந்தை பயன்படுத்தியதை அறிந்திருப்போம். மற்றொரு வகை மருந்து சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருக்கவும், அறுவை சிகிச்சையின்போதும் பயன்படுத்துவோம். இவை 2 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரம் வரைதான் தாங்கும். ஆனால் 10 முதல் 12 மணி நேரம் வரை போதை இருக்கிறது என்றால் அது தடைசெய்யப்பட்ட மருந்தாக இருக்கலாம். இல்லையெனில் மிகவும் அரிதாக கேன்சர் ட்ரீட்மெண்ட் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் மூலம் பெற்றிருக்கலாம்.

மருத்துவம்
மருத்துவம்

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவ்வாறான மருந்துகளை வாங்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு போதை ஊசி பயன்படுத்துவோருக்கு நரம்பு, மூளை, கல்லீரல் பாதிக்கப்படும். தொடர்ச்சியாக பயன்படுத்துவோர் மனநலம் பாதித்து விரைவில் உயிரிழக்க நேரிடும்" என்றார்.