Published:Updated:

தேனி: `தேடப்படும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம்’ - சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய இன்ஸ்பெக்டர்

ஆய்வாளர் முருகன்
ஆய்வாளர் முருகன்

மிரட்டல் வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளிகளுக்கு தேனியில் அடைக்கலம் கொடுத்த காவல் ஆய்வாளர், விவகாரம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் அணில் சேமியா நிறுவனத்தினை மிரட்டி பணம் கேட்டதாக, அந்நிறுவனத்தினர் கொடுத்த புகாரால், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நேசன் (தமிழ் தேசிய கட்சி மாநிலத் தலைவர்), சிவக்குமார் (தமிழ் தேசிய கட்சி திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர்) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தது.

குற்றவாளிகளை விடுதிக்குள் அழைத்துச் செல்லும் ஆய்வாளர் முருகன்
குற்றவாளிகளை விடுதிக்குள் அழைத்துச் செல்லும் ஆய்வாளர் முருகன்

இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தேடிய போது, இருவரும் தேனி மாவட்டம் போடியில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர். விரைந்து வந்த திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீஸார், போடியில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போடி நகர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருக்கும் முருகன் உதவியில் தான் தனியார் விடுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தேனி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகத் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, “திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், போடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் முருகன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

நம்மிடையே பேசிய தேனி போலீஸார், ``கடந்த ஒரு மாதமாக, இந்த விவகாரம் புகைந்துகொண்டிருந்தது. இப்போதுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் கொடுத்த விசாரணை அறிக்கையில், போடி தனியார் விடுதியில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள்தான் வலுவான ஆதாரமாக இருக்கிறது. அதில், தேடப்படும் குற்றவாளிகளை ஆய்வாளர் முருகன், அழைத்துக்கொண்டு விடுதிக்குள் செல்கிறார். இப்பிரச்னையின் தொடர்ச்சியாக ஆய்வாளார் முருகன் சஸ்பெண்டு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

தேனி:`வனத்துறை செய்வது கொஞ்சம்கூட சரியில்லை!' -கொதிக்கும் மேகமலை விவசாயிகள்
அடுத்த கட்டுரைக்கு