Published:Updated:

`24 சாக்குகளில் 2,000 மதுபாட்டில்கள்!'- ஆட்டோ சேஸிங்கில் அதிர்ந்த தேனி போலீஸ்

ஆட்டோவில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்தப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்

2 ஆயிரம் மதுபாட்டில்களுடன் சென்ற ஆட்டோவை போலீஸார் விரட்டிப் பிடித்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்

தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (24), தேனி சிவராம் நகரைச் சேர்ந்தவர் அறிவானந்தம் (வயது 39). இருவரும், நேற்று மாலை ஆட்டோவில் மதுபாட்டில்களைக் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, அல்லிநகரம் போலீஸார், சம்பந்தப்பட்ட ஆட்டோவை துரத்திச் சென்றனர்.

அரவிந்தன் & அறிவானந்தம்
அரவிந்தன் & அறிவானந்தம்

தேனி கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவில் இருந்த மதுபாட்டிகளைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மதுபாட்டில்களைக் கைப்பற்றிய போலீஸார், அரவிந்தன் மற்றும் அறிவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

`காலி மதுபாட்டில் பிரச்னை; ரூ.10,000 அபராதம்!' - நீலகிரி ஆட்சியர் அதிரடி

இது தொடர்பாகப் பேசிய போலீஸார், “மொத்தம் 24 சாக்குகளில் 2 ஆயிரம் குவாட்டர் மதுபாட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இருவரிடமும் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தேனி அன்னஞ்சியில் உள்ள டாஸ்மார்க் கடையிலிருந்தே மதுபாட்டில்களை வாங்கி வந்ததாகக் கூறுகின்றனர். டாஸ்மார்க் கடையில் எப்படி இவ்வளவு மதுபாட்டில்கள் கிடைத்தது? ஏன் இவ்வளவு மதுபாட்டில்களை இவர்கள் வாங்க வேண்டும்? என்ற கேள்விக்கு விசாரணை முடிவிலேயே விடை கிடைக்கும்.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்

மேலும், அதிகமான அளவு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால், தேனி மதுவிலக்கு போலீஸாரிடம் விசாரணையை ஒப்படைக்க இருக்கிறோம்” என்றனர்.

ஆட்டோவில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்தப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.