Published:Updated:

``சாமிக்கு வேண்டியிருந்த ஆட்டை திருடி தின்னுட்டானுங்க சார்..!" - தலையுடன் வந்து புகாரளித்த விவசாயி

குடியாத்தம் - விவசாயி புகார்

ஆட்டை திருடி சமைத்து சாப்பிட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கைப்பற்றப்பட்ட மிச்சம் மீதமிருந்த ஆட்டுத் தலை, இறைச்சியுடன் விவசாயி ஒருவர் காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கிறார்.

``சாமிக்கு வேண்டியிருந்த ஆட்டை திருடி தின்னுட்டானுங்க சார்..!" - தலையுடன் வந்து புகாரளித்த விவசாயி

ஆட்டை திருடி சமைத்து சாப்பிட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கைப்பற்றப்பட்ட மிச்சம் மீதமிருந்த ஆட்டுத் தலை, இறைச்சியுடன் விவசாயி ஒருவர் காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
குடியாத்தம் - விவசாயி புகார்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த 41 வயதாகும் முருகன் என்பவர், அங்குள்ள உழவர் சந்தையில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டாக கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கிடா ஆட்டை வளர்த்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் முன்புறம் கட்டிவைத்திருந்த அவரின் ஆட்டை நேற்று அதிகாலை யாரோ தூக்கிச் சென்றுவிட்டனர். விடிந்து எழுந்துப் பார்த்த முருகன், ஆடு காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். தேடிப் பார்த்த அவருக்கு மேலும் அதிர்ச்சிக் காத்திருந்தது. அவரின் கிராமத்துக்குள்ளேயே ஓரிடத்தில் அவரின் ஆட்டுத் தலையும், கொஞ்சம் இறைச்சியும் வெட்டி வைக்கப்பட்டிருந்தை அவர் கண்டுபிடித்தார்.

மீதமிருந்த ஆட்டு தலை மற்றும் இறைச்சி
மீதமிருந்த ஆட்டு தலை மற்றும் இறைச்சி

விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் ஆட்டை திருடிச்சென்று வெட்டி சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட்டது போக மீதமிருந்த கறியை கூறுப்போட்டு விற்கப் பார்த்துள்ளனர். அவர்களிடமிருந்து இறைச்சி, ஆட்டின் தலையைக் கைப்பற்றிய முருகன் நேராக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்குச் சென்று, ``சாமிக்கு வேண்டியிருந்த ஆட்டை திருடி தின்னுட்டானுங்க சார்" என்று புகாரளித்தார். இது தொடர்பாக, எஸ்.ஐ சிலம்பரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism