Published:Updated:

மும்பை: 20 ஆண்டுகளில் 50 முறை சிறை சென்ற திருடன் மீண்டும் கைது... திருந்தப்போவதாக வாக்குமூலம்!

ரமேஷ் ஜெய்ஸ்வால்

கடந்த 20 ஆண்டுகளில் 50 முறை குற்றச்செயல்களுக்காகச் சிறைக்கு சென்று வந்த திருடன் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மும்பை: 20 ஆண்டுகளில் 50 முறை சிறை சென்ற திருடன் மீண்டும் கைது... திருந்தப்போவதாக வாக்குமூலம்!

கடந்த 20 ஆண்டுகளில் 50 முறை குற்றச்செயல்களுக்காகச் சிறைக்கு சென்று வந்த திருடன் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
ரமேஷ் ஜெய்ஸ்வால்

மும்பை மான்கூர்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ஜெய்ஸ்வால் (42). தனது 20 வயதிலிருந்தே திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டுவருகிறார். இதுவரை மொத்தம் 50 முறை கைதாகி சிறைக்குச் சென்றிருக்கிறார். தற்போது மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். மும்பை பைகுலா பகுதியில் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய ஜெய்ஸ்வால், `என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். `நாம் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்திருக்கிறோம்’ என்று பேச்சுக்கொடுத்தார். இதனால் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஜெய்ஸ்வாலை எங்கு சந்தித்தோம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். அதேநேரம், நட்பு முறையில், `நீங்கள் அணிந்திருக்கும் செயின் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் அதன் டிசைனைப் பார்க்கலாமா?’ என்று ஜெய்ஸ்வால் கேட்டார்.

கொள்ளை
கொள்ளை

உடனே ரியல் எஸ்டேட் ஏஜென்ட் செயினைக் கழற்றி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்தார். ஜெய்ஸ்வால் அந்த செயினை பார்த்துவிட்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சட்டை பாக்கெட்டில் வைப்பதாகக் கூறி வைத்தார். பின்னர் அங்கிருந்து ஜெய்ஸ்வால் சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு சட்டைப் பையைச் சோதித்தபோது அங்கு செயின் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

ஜெய்ஸ்வால் புகைப்படம் கிடைத்தவுடன் அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பி தேட ஆரம்பித்தனர். இறுதியில் மான்கூர்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஜெய்ஸ்வால் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான் அவர் 50 முறை சிறைக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. கடந்த 2-ம் தேதிதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் 8-ம் தேதியே திருட்டில் ஈடுபட்டுள்ளார். 2-ம் தேதியிலிருந்து மூன்று திருட்டுகளில் ஈடுபட்டுவிட்டார். போலீஸ் விசாரணையில், `நான் இனி மேல் தவறுகள் செய்ய மாட்டேன், திருந்தி வாழப்போகிறேன், சிறையிலிருந்து வெளியில் வர கடன் வாங்கினேன். அந்தக் கடனை அடைக்கத்தான் திருட்டில் ஈடுபட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism