Published:Updated:

திருடச் சென்ற வீட்டில் கிச்சடி சமைத்த நபர்! - போலீஸில் சிக்கியது எப்படி?

கிச்சடி சமைத்த கொள்ளையன்
News
கிச்சடி சமைத்த கொள்ளையன்

அஸ்ஸாமில் திருடச் சென்ற வீட்டில் சாப்பிடுவதற்கு சமையல் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

எத்தனையோ படங்களில் திருடச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு மட்டுமல்லாது சாப்பிடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், அஸ்ஸாமில் திருடச் சென்ற வீட்டில் சாப்பிட எதுவும் இல்லாததால் கொள்ளையன் ஒருவன் தானே சமையல் செய்து சாப்பிடலாம் என்று களத்தில் இறங்கி சிக்கிக்கொண்டான். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள வீட்டுக்கு திருடன் ஒருவன் திருடுவதற்காகச் சென்றிருக்கிறான். வீட்டு உரிமையாளர் வேலையாக வெளியில் சென்று இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு திருடன் காரியத்தில் இறங்கினான். திருடுவதற்காக சென்ற கொள்ளையனுக்கு பசித்திருக்கிறது.

அதனால், முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு கொள்ளையில் இறங்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறான். ஆனால், சமையலறையில் சாப்பிட எதுவும் இல்லாததால், அவனே வீட்டில் இருந்த காய்கறிகளை பயன்படுத்தி கிச்சடி தயாரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறான்.

கிச்சடி
கிச்சடி

அவன் மும்முரமாக கிச்சடி செய்யும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு சத்தம் கேட்டது. ஆள் இல்லாத வீட்டுக்குள் யாரோ நுழைந்துவிட்டதை உணர்ந்த அவர்கள், உடனே ஒன்று சேர்ந்து கதவை திறந்து திருடனை பிடித்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, கிச்சடி தயாராகிக்கொண்டிருந்தது தெரியவந்தது. கிச்சடி தயாரித்து சாப்பிட்டு முடிக்கும் முன்பாக அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். திருடனை பிடித்து சென்ற போலீஸார் அவனுக்கு சூடாக சாப்பாடு வாங்கிக்கொடுத்து அழைத்துச் சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைது
கைது

திருடச் சென்ற இடத்தில் அந்த நபர் சமையல் செய்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் போலீஸார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தானிய கொள்ளையனின் வினோத வழக்கு என்ற தலைப்பில், `கிச்சடி உடல் நலத்திற்கு நல்லது என்றாலும், திருடச் சென்ற இடத்தில் கிச்சடி செய்ய நினைப்பது உங்களது நலனுக்கு நல்லதல்ல!' என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளனர்.