Published:Updated:

பெரம்பலூரில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கொள்ளையன்; சென்னையில் காத்திருந்து கைதுசெய்த காவல்துறை!

பெரம்பலூர்

வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூரில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கொள்ளையன்; சென்னையில் காத்திருந்து கைதுசெய்த காவல்துறை!

வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகேயுள்ள அம்மா பாளையம் கிராமத்தில் அரசு மதுபானக் கடையின் பின்புறத்தில் வசிப்பவர் எலெக்ட்ரீஷியன் பாண்டியன். கடந்த மாதம் 8-ம் தேதி இவர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஐந்து பேர்கொண்ட கும்பல், பாண்டியனை இரும்புக்கம்பியால் தாக்கியது. பின்னர் வீட்டிலிருந்த, அவரின் மகளின் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தாலி செயின், மோதிரங்களைக் கத்திமுனையில் மிரட்டிப் பறித்தனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

தொடர்ந்து அங்கியிருந்து தப்பிச்செல்ல நினைத்தவர்கள் அவரின் வீட்டில் நிறுத்தியிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை கடத்திச் சென்றனர். இது குறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். இந்நிலையில் முகமூடி கும்பல் தப்பிச் சென்ற கார், சென்னை ஆர்.கே.நகரில் அநாதையாக நிற்பதாக பெரம்பலூர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று காரை காவல்துறையினர் மீட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் நடத்திய வாகன சோதனையின்போது அவ்வழியாக ஒரு காரில் வந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர்.

திருட்டு சம்பவம்
திருட்டு சம்பவம்

அப்போது, சிவகங்கை மாவட்டம், வேளாங்குளத்தைச் சேர்ந்த சூர்யா, ரஞ்சித், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் பாண்டியன், சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பிரசாந்த், பெரம்பலூர் சமத்துவபுரம் ஆலம்பாடி ரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் அம்மா பாளையம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து ஐந்து பேரையும் கைதுசெய்த காவல்துறையினர், நான்கு பவுன் நகைகள், காரைப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து ஐந்து பேரையும் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது கொள்ளையரில் ஐந்து பேரில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த பிரசாந்த் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பினார்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட தனிப்படை போலீஸார் தப்பியோடிய பிரசாந்தைப் பிடிக்க சென்னையில் முகாமிட்டு காத்திருந்து கைதுசெய்தனர். இதையடுத்து பிரசாந்தைக் கைதுசெய்து பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism