Published:Updated:

பட்டதாரிக்கு அரிவாள் வெட்டு; ரூ. 20 லட்சம் கொள்ளை - அண்ணாசாலையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

அண்ணா சாலை - கொள்ளை

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக்கில் சென்ற பட்டதாரியை அரிவாளால் வெட்டி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டதாரிக்கு அரிவாள் வெட்டு; ரூ. 20 லட்சம் கொள்ளை - அண்ணாசாலையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக்கில் சென்ற பட்டதாரியை அரிவாளால் வெட்டி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
அண்ணா சாலை - கொள்ளை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் சிவபாலன். பட்டதாரியான இவர், அண்ணாசாலையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடையில் பணியாற்றி வருகிறார். சென்னை சேப்பாக்கத்தில் தங்கியிருக்கும் சிவபாலன், நள்ளிரவில் ராயப்பேட்டையில் உள்ள நண்பரைப் பார்க்க 20 லட்சம் ரூபாயுடன் பைக்கில் தனியாகச் சென்றார். அப்போது அண்ணாசாலை, எஸ்.பி.ஐ வங்கி அருகே சென்றபோது மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர்கொண்ட மர்ம கும்பல் திடீரென சிவபாலனை வழிமறித்தது. பின்னர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது.

பணம்
பணம்

அதனால் அதிர்ச்சியடைந்த சிவபாலன், அருகில் உள்ள அண்ணாசாலை காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தார். மர்ம கும்பல் வெட்டியதில் சிவபாலனுக்கு ரத்தகாயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் அவரை போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவபாலன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் பணத்தை கொள்ளையடித்த கும்பலை தேடிவருகின்றனர்.

20 லட்சம் ரூபாய் குறித்து சிவபாலனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், மருத்து உபகரண கடை ஒன்றை தொடங்க திட்டமிட்டு அதற்காகத்தான் இவ்வளவு ரூபாயை ஊரிலிருந்து கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் சிவபாலன் கூறிய தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீஸாருக்கு அவர் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் பணம் தொடர்பாக சிவபாலனிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவபாலன், இவ்வளவு பணத்துடன் தனியாக செல்லும் தகவல் மர்ம கும்பலுக்கு எப்படி தெரியும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!