Published:Updated:

ரோஹினி நீதிமன்றத்திலேயே ஸ்கெட்ச்: ஜிதேந்தரின் அத்தியாயத்தை முடிக்கத் திட்டம் தீட்டிய தில்லு!|பகுதி 4

தில்லு
News
தில்லு

டெல்லியை ஆட்டிப்படைத்த கிரிமினல் ஜிதேந்தர் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து, தனது விரோதிகளைச் சுட்டு வீழ்த்திவிட்டு இறுதியில் தானும் அதே துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்.

டெல்லியில் மிரட்டிப் பணம் பறித்தல், கொலை, கொலை முயற்சிகளில் ஈடுபட்டுவந்த ஜிதேந்தர் புதிதாக குல்தீப்புடன் சேர்ந்துகொண்டு தனது ஆட்டத்தைத் தொடர்ந்தான் என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம்...

கம்ப்யூட்டரில் சிறந்து விளங்கும் குல்தீப், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, முக்கியப் பிரமுகர்களை பயமுறுத்தி பணம் பறிக்க ஜிதேந்தருக்கு மிகவும் உதவினான். இருவரும் சேர்ந்துகொண்டு டெல்லி, ஹரியானாவில் ஏராளமான ஒப்பந்தக் கொலைகளைச் செய்தனர். இதில் தில்லுவின் ஆட்களும் அடங்கும். இதனால் தில்லு - ஜிதேந்தர் இடையே நாளுக்கு நாள் பகைமை அதிகரித்துக்கொண்டேயிருந்தது. ஜிதேந்தரின் வளர்ச்சியில் குல்தீப் முக்கியப் பங்கு வகித்தான். இருவரும் சேர்ந்து தில்லுவின் ஆட்களை ஒழிப்பது என்று சபதம் செய்துகொண்டனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2017-ம் ஆண்டு, அக்டோபர் 10-ம் தேதி ஹரியானா பாடகி ஹர்ஷிதாவை பானிபட் என்ற இடத்தில்வைத்து ஜிதேந்தர் தனது ஆட்களைக்கொண்டு ஒப்பந்தக் கொலை செய்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜிதேந்தர்-தில்லு
ஜிதேந்தர்-தில்லு

இந்தக் கொலைக்குத் திட்டமிட்டது ஹர்ஷிதாவின் மைத்துனர் தினேஷ் கரலா என்று கூறும் போலீஸார், அந்தத் திட்டத்தை செயல்படுத்தியது ஜிதேந்தர் என்று தெரிவித்தனர். ஜிதேந்தர் இந்தக் கொலையைச் செய்ய தினேஷிடம் பணம் எதுவும் வாங்கவில்லை. ஆனால் அதற்குக் கைம்மாறாக தில்லுவின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை தினேஷ் கொலை செய்ய வேண்டும் என்ற ஓர் உத்தரவாதத்தை மட்டும் ஜிதேந்தர் வாங்கிக்கொண்டான். 2018-ம் ஆண்டு, ஜூன் 18-ம் தேதி ஜிதேந்தர், தில்லுவின் ஆட்கள் டெல்லியில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையில் தெருவில் நடந்து சென்ற இரண்டு பேர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். நாளுக்கு நாள் ஜிதேந்தரின் செயல்பாடுகள் மிகவும் ஆக்ரோஷமாக மாறின. பட்டப்பகலில் தனக்குப் பிடிக்காதவர்களை சுட்டுக்கொலை செய்வதை வாடிக்கையாகக்கொண்டிருந்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜிதேந்தர் கைதுசெய்யப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஜிதேந்தரும், அவரின் ஆட்களும் பட்டப்பகலில் தெருவில் நடந்து சென்ற ஒருவனை நிறுத்தி அவனைத் தங்களது எதிரணியின் ஆள் என நினைத்து 48 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 26 குண்டுகள் சம்பந்தப்பட்ட நபர்மீது பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மார்க்கெட்டில் நடந்த இச்சம்பவம் டெல்லியை உலுக்கியதோடு, தில்லுவின் திறமைக்கும் சவாலாக அமைந்தது. தொடர்ச்சியாக குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த ஜிதேந்தரை கடந்த ஆண்டு, மார்ச் 3-ம் தேதி பிரமாண்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் போலீஸார் கைதுசெய்தனர்.

கைது
கைது

அவன் இருந்த அதே வீட்டில்தான் குல்தீப்பும் இருந்திருக்கிறான். ஆனால் அங்கிருந்து தப்பிவிட்டான். அவனும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தான். ஜிதேந்தரைக் கொலைசெய்யக் காத்துக்கொண்டிருந்த தில்லுவுக்கு அவன் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியைக் கொடுத்தது. அப்படியிருந்தும் ஜிதேந்தரைக் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் தில்லு இருந்தான். இதற்காக தில்லு தனது ஆட்கள் மூலம் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான். ஆனால் இது தெரியாமல் ஜிதேந்தர் சிறையில் இருந்துகொண்டு போன் மூலம் வியாபாரிகள், முக்கியப் பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருந்தான்.

தில்லும் வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு, வேறு ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். ஆனாலும் சிறையில் இருந்துகொண்டே தனது ஆட்களைக்கொண்டு ஜிதேந்தரை தீர்த்துக்கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டினான். ஜிதேந்தர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படும்போது நீதிமன்றத்தில், நீதிபதியின் அறையில்வைத்து கொலை செய்வது என்ற முடிவு அவர்களுக்குள் எடுக்கப்பட்டது. அதுவும் ரோஹினி கோர்ட்டில்தான் நடந்தது. எப்படி நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்..!

(தொடரும்..)