Published:Updated:

`கல்லூரிக்கு முட்டுக்கட்டை; திடீர் திருமணம்!’ -மூன்றே நாளில் விபரீத முடிவு எடுத்த இளம்பெண்

திவ்யா
திவ்யா

திருமணமான மூன்றே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆற்காட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (53). இவரது மகள் திவ்யா (21), வாலாஜாபேட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.

crime
crime

இந்த நிலையில், திவ்யாவை கல்லூரிக்கு அனுப்பாமல் சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த ராகவேந்திரன் (27) என்பவருக்குக் கடந்த 7-ம் தேதி பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். ராகவேந்திரன் சென்னையில் போலீஸ்காரராகப் பணிபுரிந்துவருகிறார்.

திருமணம் முடிந்த கையுடன் 10-ம் தேதி காலை திவ்யாவை அழைத்துக்கொண்டு ஆற்காட்டில் உள்ள கோயில் மற்றும் சினிமாவுக்குக் கணவன் ராகவேந்திரன் சென்றார். அன்று மதியம் சக்கரமல்லூரில் உள்ள திவ்யாவின் அக்காள் சங்கீதா வீட்டுக்கு விருந்து சாப்பிடச் சென்றனர்.

Suicide
Suicide

பல வகை பலகாரங்களும் அசைவ உணவும் பரிமாறப்பட்டன. ஆனால், வாடிய முகத்துடன் காணப்பட்ட திவ்யா, சரியாகச் சாப்பிடவில்லை என்கிறார்கள். திவ்யாவின் பாட்டி, `என்னம்மா ஆச்சி... சாப்பிடுமா'னு கூறியுள்ளார். ஆனால், பாட்டியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று திவ்யா பதில் சொல்லியதாகக் கூறுகிறார்கள்.

பின்னர், தூக்கம் வருவதாகச் சொல்லி அக்கா வீட்டில் உள்ள படுக்கை அறைக்குச் சென்ற திவ்யா, கதவை உள்பக்கமாகத் தாழிட்டிருக்கிறார். பின்னர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து திவ்யாவின் சடலத்தை மீட்டனர்.

திவ்யா
திவ்யா

பிரேத பரிசோதனைக்காக உடல் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருமணமான மூன்றே நாளில் திவ்யா ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார். காதல் விவகாரத்தில் கல்லூரி படிப்பை நிறுத்தி கட்டாய திருமணம் செய்துவைத்ததால் தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் மற்றும் ஆற்காடு தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு