Published:Updated:

`கடனைக் கட்டலைன்னா, பாலியல் தொழிலுக்குப் போனு மிரட்டுறாங்க' - வீடியோவில் பேசிவிட்டு பெண் தற்கொலை

திருச்செங்கோடு ( நா.ராஜமுருகன் )

ஒரு பெண் உள்ளிட்ட சிலர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்துவதோடு, பணம் தர முடியவில்லையென்றால் பாலியல் தொழில் செய் என்று மிரட்டுவதாகக் கூறி, வீடியோ பதிவுசெய்துவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`கடனைக் கட்டலைன்னா, பாலியல் தொழிலுக்குப் போனு மிரட்டுறாங்க' - வீடியோவில் பேசிவிட்டு பெண் தற்கொலை

ஒரு பெண் உள்ளிட்ட சிலர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்துவதோடு, பணம் தர முடியவில்லையென்றால் பாலியல் தொழில் செய் என்று மிரட்டுவதாகக் கூறி, வீடியோ பதிவுசெய்துவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருச்செங்கோடு ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (52). இவர், கட்டட மேஸ்திரியாகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சிவகாமி (45). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனாவுக்குத் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சிவகாமியின் மகன் பிரகாஷ் கோயம்புத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், சிவகாமி அவரின் வீட்டில் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். வழக்கம்போல் செல்வம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மகள் கீர்த்தனா தன்னுடைய தாயாருக்கு போன் செய்ய, போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கீர்த்தனா தன்னுடைய தந்தைக்கு போன் செய்து, 'அம்மா போனை எடுக்கவில்லை' எனத் தகவல் கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே, மனமுடைந்த நிலையில் சிவகாமி இருப்பதை அறிந்த செல்வம், விரைந்து வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார்.

 தற்கொலை செய்துகொண்ட சிவகாமி
தற்கொலை செய்துகொண்ட சிவகாமி
நா.ராஜமுருகன்

வீட்டுக்கு வந்து செல்வம் பார்த்தபோது, தன்னுடைய மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு பதறி, அக்கம் பக்கத்தினரை அழைத்து வீட்டின் கதவை அடைத்து உள்ளே சென்று உடலை இறக்கியிருக்கிறார். உடனடியாக, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அவரின் உடலைக் கொண்டுவந்தனர். ஆனால், ஏற்கெனவே சிவகாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். அவர்களின் புகாரைத் தொடர்ந்து, திருச்செங்கோடு நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்ததில், சிவகாமி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தன்னுடைய செல்போனில் சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு வீடியோவைப் பதிவிட்டிருப்பது தெரியவந்தது.

அதில், பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாதேஸ்வரி என்பவரிடம் சுமார் 56 பவுன் நகைகளை வைத்து பணம் வாங்கியிருந்ததாகவும், அதில் 40 பவுன் நகையை விற்று கட்டியது போக மீதி 16 பவுன் நகை அவரிடம் இருப்பதாகவும், அதற்கு சுமார் 16 லட்சம் ரூபாய் வட்டியுடன் பணம் பாக்கியிருப்பதாகவும், அந்தப் பணத்தைக் கேட்டு மாதேஸ்வரி நெருக்கடி கொடுப்பதாகவும், பணத்தைத் தர தன்னைத் தவறான தொழிலில் ஈடுபட வலியுறுத்துவதாகவும் அல்லது கிட்னியை விற்று பணம் கொடுக்கும்படி கூறுவதாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னுடைய கணவரைப் பார்த்துக்கொள்ளும்படி மகனுக்கு வேண்டுகோளும் அந்த வீடியோ மூலம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவைக் கைப்பற்றிய போலீஸார், மாதேஸ்வரியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின்போது, மாதேஸ்வரி போலீஸாரிடம், `வேறு ஒருவர் மூலமாக எனக்கு அறிமுகமான சிவகாமி அவ்வப்போது நகைகளைக் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுச் சென்றார். அதனால், அந்த நகையை நான் எடை போடாமலேயே வாங்கி வைத்துக்கொண்டேன். பல காலமாக இது நடந்துவந்தது. ஒருமுறை சந்தேகம் வந்து பார்க்கும்போது, நகையினுடைய எடை குறைவாக இருந்தது. அவர் மேலிருந்த நம்பிக்கையில் இதுவரை எடை போடாமல் வாங்கிவந்த நிலையில், 'பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு; என்னிடம் உனக்கு மேற்கொண்டு கொடுக்க பணம் இல்லை' என நான் பணம் கொடுப்பதை நிறுத்தியதால், மேற்கொண்டு ரொட்டேஷன் செய்ய முடியாமல் தடுமாறிய சிவகாமி, இதுபோல் தவறாக என்னைப் பற்றி வீடியோ பதிவு செய்துவிட்டு, இறந்து போயிருக்கிறார்' என்று தெரிவித்திருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட சிவகாமி
தற்கொலை செய்துகொண்ட சிவகாமி
நா.ராஜமுருகன்

இந்த சம்பவத்திலுள்ள உண்மைத்தன்மை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். அதேபோல், சிவகாமி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு நபரான மணிகண்டன் என்பவர் யார், அவருக்கும் மாதேஸ்வரிக்கும் என்ன தொடர்பு, இதில் தொடர்புடைய பத்து தலை முனியம்மா என்பவர் யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம், எட்டிமடைப் பகுதியிலும், பச்சையம்மன் கோயில் மேடு பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.