Published:Updated:

தி.மலை: திருமணம் மீறிய உறவு இருப்பதாகச் சந்தேகம்; மனைவியைக் கொன்று கரும்புக்காட்டில் எரித்த கணவன்!

murder - கொலை
News
murder - கொலை

தன் மனைவி, திருமணம் மீறிய உறவில் இருப்பதாக சந்தேகமடைந்த ராஜா அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலஸ்தாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அண்மை நாள்களாக மதுபோதைக்கு மிகவும் அடிமையான ராஜா, ஆட்டோ ஓட்டுவதற்கு சரிவர செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளார். அடிக்கடி மனைவி ராணியிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் தன் மனைவி, திருமணம் மீறிய உறவில் இருப்பதாக சந்தேகமடைந்த ராஜா அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராணி வெகு நேரமாக வீடு திரும்பவில்லையாம். இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போதும் ராணியை கண்டறிய முடியாமல் போயுள்ளது.

ராணி
ராணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், மறுநாள் காலையில் தனது சொந்த நிலத்துக்கு சென்றுள்ளார் ராஜாவின் தாயார் பச்சையம்மாள். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் ராணி எரிந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டு கத்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், மங்கலம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் காவல்துறையினர், ராணியின் உடலை மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் ராணியின் கணவர் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்துள்ளார். அவரின் வார்த்தைகளில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டபோது, ``எம் மனைவி, எங்களுடைய பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்து அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொள்வோம். கடந்த 5-ம் தேதி மாலை, வயலில் மாட்டுக்கு புல் அறுக்கச் சென்ற மனைவி ராணியிடம் சண்டையிட்டேன். அப்போது, கோபம் அடைந்து ராணியை தாக்கி கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்.

தீ வைத்து எரிப்பு
தீ வைத்து எரிப்பு

கொலையை மறைப்பதற்காக அருகிலிருந்த கரும்பு தோட்டத்தில் மனைவியின் உடலை வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டேன்" என ராஜா ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ராஜாவை கைது செய்த காவல்துறையினர், 302-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.