Published:Updated:

`ஜாமீனில் வெளியே வரும் கொள்ளையன் முருகன்?’ - திருச்சி போலீஸார் ஷாக்

கொள்ளையன்  திருவாரூர் முருகன்
News
கொள்ளையன் திருவாரூர் முருகன்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளிட்ட வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருப்பதால் திருவாரூர் முருகன் விரைவில் வெளியே வர உள்ளார்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தவழக்கில், கொள்ளையர்கள் மிக்கி மவுஸ் முகமூடி, ஜெர்கின் மற்றும் கையுறை பயன்படுத்தியது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது. அதனடிப்படையில் நடை, உடை, பாவனைகள் மூலம் நடந்த கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என ஆரம்பத்தில் போலீஸார் சந்தேகித்தனர்.

திகிலடைய வைத்த திருவாரூர் முருகன்

தமிழகம் முழுவதும் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். அதையடுத்து, அக்டோபர் 3-ம் தேதி மாலை திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே போலீஸார் நடத்திய வாகன சோதனையில் திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த மணிகண்டன் 4 கிலோ தங்கத்துடன் சிக்கினார். தொடர்ந்து, திருவாரூர் முருகனின் அக்கா கனகவல்லி, முருகனின் கூட்டாளிகளான கணேசன், வெல்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக போலீஸார் வசம் வந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன், அவரின் மைத்துனர் சுரேஷ் மட்டும் எஸ்கேப் ஆனார்கள். போலீஸாரின் தொடர் நெருக்கடிகளால், முருகன் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் அவரின் மைத்துனர் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

கொள்ளையன் 
 திருவாரூர் முருகன்
கொள்ளையன் திருவாரூர் முருகன்

முருகன், பெங்களூரில் நிலுவையிலுள்ள கொள்ளை வழக்கில் சரணடைந்ததால், அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, தமிழக போலீஸார், முருகனைத் தமிழகம் அழைத்து வர சட்டப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், பெங்களூரு போலீஸாரோ, சத்தமில்லாமல் முருகனை தமிழகம் அழைத்து வந்து திருச்சி காவிரி ஆற்றங்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்றனர்.

குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய முருகன்

தகவலறிந்த தமிழக போலீஸார், பெரம்பலூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வைத்து பெங்களூர் போலீஸாரின் வாகனங்களை மடக்கிப் பிடித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற தமிழக போலீஸாரின் விசாரணையில்தான், முருகன் தன் கூட்டாளிகள் துணையுடன் திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார்.

கொள்ளையன் 
 திருவாரூர் முருகன்
கொள்ளையன் திருவாரூர் முருகன்

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த திருச்சி போலீஸார், முருகனின் கூட்டாளிகளான சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி ஆகியோரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஆனால், முருகன் மீது திருச்சி மட்டுமல்லாமல் பெங்களூரு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், முறையாக வழக்கு ஆவணங்கள் கிடைக்காததால் முருகனைக் குண்டர் சட்டத்தில் அடைக்க முடியவில்லை.

மேலும், திருவாரூர் முருகன், கொள்ளையடித்த நகைகளை அவ்வப்போது போலீஸாருக்கு பங்கு கொடுத்ததால், போலீஸார் முருகனை பல நேரங்களில் தப்ப விட்டதும் விசாரணையில் அம்பலமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீண்டும் அடையாளம் இழந்த முருகன்

கொள்ளையடித்த பணத்தில் முருகன் தெலுங்கு மொழியில் 2 சினிமாக்களைத் தயாரித்ததும், அதில் முருகனின் மைத்துனர் சுரேஷ் கதாநாயகனாக நடித்ததும் தெரியவந்தது. அந்தப் படங்கள், சில காரணங்களால் பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளைக் கொண்டு மீண்டும் திரைப்படம் தயாரிக்க முயன்ற முருகன், பிரபல தமிழ் நடிகைக்கு நெக்லஸ் பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை
லலிதா ஜூவல்லரி கொள்ளை

ஆட்கொல்லி நோயில் பாதிக்கப்பட்ட முருகனின் உடல் நலிவுற்றநிலையில், நவீன சிகிச்சை மூலம் கொள்ளையடித்த பணத்தில் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தும், தனது கெட்டப்பை மாற்றினார். கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் முருகன், மீண்டும் உடல்நலக்குறைவால் உருமாறி உள்ளார்.

லலிதா ஜுவல்லரி நகைக்கடைக் கொள்ளை வழக்கில் அப்போதைய திருச்சி கோட்டைக் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலராமன் தலைமையிலான போலீஸார் குற்றப்பத்திரிகை தயார் செய்து தாக்கல் செய்ய தயாராக இருந்தனர். இந்நிலையில், திடீரென கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்றங்களும் விடுமுறை விடப்பட்டது. இதனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும் கால தாமதமானது.

மீண்டும் கோட்டைவிட்ட போலீஸார்

இந்நிலையில், குற்றவியல் சட்டப்படி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது, 90 நாள்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனில், அவருக்கு நீதிமன்றம் தானாக ஜாமீன் வழங்கும். அதன் அடிப்படையிலும், முருகன் தற்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தரப்பு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ததாலும், திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை முருகனுக்கு ஜாமீன் வழங்கியது.

திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் கொள்ளை வழக்கிலும் அதே அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கம் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து, இதே காரணத்தின் அடிப்படையில் பெங்களூரு வழக்குகளிலும் ஜாமீன் பெற்று முருகன் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.