Published:Updated:

`போதைப்பொருள்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டுமே போதாது!’ -திருவாரூர் எஸ்.பி-யின் வேண்டுகோள்

விஜயகுமார் ஐ.பி.எஸ்
News
விஜயகுமார் ஐ.பி.எஸ்

போதைப்பொருள்களை ஒழிக்க, காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் அதேசமயம்...

சமீபகாலமாக தமிழ்நாட்டில் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போதைப்பொருள்கள் விநியோகம் பரவலாக நடைபெறுவதால், இவற்றைப் பயன்படுத்துபவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், போதைப்பொருள்கள் ஒழிப்பு தொடர்பாக, உருக்கமான வேண்கோள் விடுத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்திருப்பதோடு, சில வழிகாட்டுதல்களையும் அந்த வீடியோவில் முன்வைத்துள்ளார்.

விஜயகுமார் ஐ.பி.எஸ்
விஜயகுமார் ஐ.பி.எஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``கஞ்சா போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். நீங்கள் இந்த போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் கண்டிப்பாக போதைப்பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதேசமயத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். போதைப்பொருள்களை ஒழிக்க, காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் அதேசமயம், காவல்துறை எடுக்கக்கூடிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே இது போன்ற குற்றங்களை முழுமையாகத் தடுத்துவிட முடியாது. எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

`போதைப்பொருள்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டுமே போதாது!’ -திருவாரூர் எஸ்.பி-யின் வேண்டுகோள்

அதேபோன்று இளைஞர்கள், சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் போன்றவர்களை அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடைய நடவடிக்கைகளைச் சற்று கூர்ந்து கவனித்து அதில் அவர்கள் போதைப்பொருள் ஏதேனும் பயன்படுத்துவது போன்ற மாற்றம் தெரிந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு உடனே அதைத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்கள்தான் சமுதாயத்தில் முக்கியப் பங்குவகிக்கிறார்கள். காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இருப்பினும் இதை முற்றிலும் ஒவ்வொரு கிராமமாகச் சென்று ஒழிக்க வேண்டுமென்றால் அதில் சமுதாயத்தின் பங்களிப்பு அவசியம்” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிரப்பட்டுவருகிறது.