திருவேற்காட்டுக்கு அருகில் உள்ள கோலடி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் முனி ராஜ் மற்றும் முனி செல்வம் ஆகியோர் சப்ளையாராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், அந்த பாருக்கு மது அருந்த வந்த ஒரு வாடிக்கையாளர் 100 ரூபாய் டிப்ஸ் கொடுத்து இருவரையும் பிரித்துக் கொள்ளுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

முனி ராஜிடம் கொடுக்கப்பட்ட 100 ரூபாயில் முனி செல்வத்துக்குப் பங்கு தராமல் தனியாக மது வாங்கி குடித்திருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்த முனி செல்வம், முனி ராஜிடம் தகராற்றில் ஈடுபட்டிருக்கிறார். ஆத்திரத்திலிருந்த முனி செல்வம் தாக்கியதில், மது போதையிலிருந்த முனி ராஜ் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சக ஊழியருடன் 100 ரூபாய் டிப்ஸ் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட சண்டை உயிரிழப்பு வரை சென்றது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.