Published:Updated:

சென்னை: சிறுமிக்கு தாலிக் கட்டிய இளைஞன்; உதவிய அம்மாவுக்கு போலீஸார் வலை!

சிறுமி

சென்னையில் சிறுமிக்கு தாலிக் கட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இளைஞனின் அம்மா அவரின் சித்தியை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை: சிறுமிக்கு தாலிக் கட்டிய இளைஞன்; உதவிய அம்மாவுக்கு போலீஸார் வலை!

சென்னையில் சிறுமிக்கு தாலிக் கட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இளைஞனின் அம்மா அவரின் சித்தியை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
சிறுமி

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அவரைக் கடந்த 17.1.2022-ம் தேதி முதல் காணவில்லை என்று திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை எர்ணாவூரைச் சேர்ந்த அந்தோணி என்ற இளைஞர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தோணியையும், சிறுமியையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தோணியிடம் விசாரணை நடத்தினோம். அப்போது சிறுமியை அந்தோணி காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 17-ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அந்தோணியின் அம்மா ஸ்டெல்லா மேரி, சித்தி வேதவள்ளி ஆகியோரின் உதவியோடு சிறுமியை திருமணம் செய்திருக்கிறார். இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் இந்த வழக்கை திருவொற்றியூர் காவல் நிலையத்திலிருந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்துள்ளோம். அந்தோணி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் ஸ்டெல்லா மேரி, வேதவள்ளி ஆகியோரை தேடிவருகிறோம். சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம். விசாரணைக்குப்பிறகு அந்தோணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism