Published:Updated:

ஃபேஸ்புக் பதிவால் ஆத்திரம்; ரயில் நிலைய அதிகாரியை கார் ஏற்றிக் கொன்ற நபர்கள் - சிக்கியது எப்படி?!

கைதுசெய்யப்பட்டவர்கள்

விபத்தில் உயிரிழந்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு, அவரை கார் எற்றிக் கொலைசெய்த இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஃபேஸ்புக் பதிவால் ஆத்திரம்; ரயில் நிலைய அதிகாரியை கார் ஏற்றிக் கொன்ற நபர்கள் - சிக்கியது எப்படி?!

விபத்தில் உயிரிழந்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு, அவரை கார் எற்றிக் கொலைசெய்த இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்டவர்கள்

திருநெல்வேலி, கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன். இவர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரியாகப் பணிபுரிந்துவந்தார். அவர், கடந்த 16-ம் தேதி, வேலை முடித்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, புளியங்குளம் பரம்பு அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று அவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், படுகாயமடைந்த செந்தாமரைக் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர்.

உயிரிழந்த செந்தாமரைகக் கண்ணன்
உயிரிழந்த செந்தாமரைகக் கண்ணன்

போலீஸார் விபத்து நடந்த சாலையிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து செந்தாமரைக் கண்ணனின் பைக்கை தொடர்ந்துவந்த காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அதில், செந்தாமரைக் கண்ணனை கார் ஏற்றிக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கிருஷ்ணாபுரம் பரம்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே எண் கொண்ட காரை சுற்றிவளைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காருக்குள் இருந்த வல்லநாட்டைச் சேர்ந்த மகேஷ், சுடலைமணி ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``கொலை செய்யப்பட்ட செந்தாமரைக் கண்ணனுக்கும், நாசரேத்தைச் சேர்ந்த சாம்ராட் பாண்டியன் குடும்பத்தினருக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. சாம்ராட் பாண்டியன் தன் நண்பர்களுடன் கடந்த ஜனவரி 4-ம் தேதி, கோவாவுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கிருந்து திரும்பும்போது கோவாவில் நடந்த ரயில் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

செய்துங்கநல்லூர் காவல் நிலையம்
செய்துங்கநல்லூர் காவல் நிலையம்

சாம்ரட் பாண்டியன் மறைவுக்கு முகநூலில் அவர் நண்பர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதில், `இறைவன் தண்டனை’ என செந்தாமரைக் கண்னன் பதிவிட்டாராம். அதனால், ஆத்திரமடைந்த சாம்ராட் பாண்டியனின் நண்பர்கள், வாகன விபத்துபோல திட்டமிட்டு செந்தாமரைக் கண்ணனைக் கொலை செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் ஜெகன் பாண்டியன், கந்தகுமார், மார்த்தாண்டம் ஆகிய மூன்று பேரைத் தேடிவருகிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism