Published:Updated:

``ஷ்ரத்தா என்னை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டினார்” - நார்கோ டெஸ்டில் அஃப்தாப் சொன்னது என்ன?!

அஃப்தாப் பூனாவாலா-ஷ்ரத்தா

``என்னை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டியதால் கோபத்தில் ஷ்ரத்தாவை கொலை செய்தேன்” என அஃப்தாப் நார்கோ டெஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

``ஷ்ரத்தா என்னை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டினார்” - நார்கோ டெஸ்டில் அஃப்தாப் சொன்னது என்ன?!

``என்னை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டியதால் கோபத்தில் ஷ்ரத்தாவை கொலை செய்தேன்” என அஃப்தாப் நார்கோ டெஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அஃப்தாப் பூனாவாலா-ஷ்ரத்தா

டெல்லியில் கடந்த மே மாதம் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அஃப்தாப் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி காட்டிற்குள் வீசி எறிந்தான். இது தொடர்பாக அஃப்தாப் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறான். போலீஸார் விசாரித்து முடித்துள்ள நிலையில் அஃப்தாப் தெரிவித்த தகவல்கள் உண்மையானதுதானா என்பதை தெரிந்து கொள்ள உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த முறை இச்சோதனைக்காக டெல்லி ரோஹினியில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு அஃப்தாப்பை அழைத்து வந்துவிட்டு, திரும்ப சென்ற போது போலீஸ் வாகனத்தின் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தின. எனவே இம்முறை பலத்த பாதுகாப்புடன் அஃப்தாப் நார்கோ டெஸ்டிற்காக அழைத்து வரப்பட்டான்.

``ஷ்ரத்தா என்னை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டினார்” -  நார்கோ டெஸ்டில் அஃப்தாப் சொன்னது என்ன?!

இரண்டு மணி நேரம் இந்த நார்கோ டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதுவும் ஒரு வகை உண்மை கண்டறியும் சோதனைதான். இச்சோதனையில் இரண்டு டாக்டர்கள் உட்பட 5 பேர் பங்கேற்றனர். அஃப்தாப்புக்கு உண்மையை வெளிக்கொண்டு வர ஒருவகையான ஊசி போடப்பட்டது. ஆபரேசன் தியேட்டரில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு மருந்தின் தாக்கம் காரணமாக இரண்டு முறை மயங்கி விழுந்தான் என்று போலீஸார் தெரிவித்தனர்.

நார்கோ டெஸ்டில் 20 முதல் 25 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இதில், `ஷ்ரத்தா என்னை விட்டு சென்றுவிடுவேன்’ என்று மிரட்டியதால் கோபத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்தான். ஷ்ரத்தாவின் மொபைல் போன், அவரின் உடைகள் எங்கு போட்டாய் என்றும், உடல் உறுப்புக்களை எங்கு போட்டாய் என்பது போன்ற கேள்விகள் கேட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதில் பெரும்பாலும் ஏற்கனவே போலீஸாரிடம் தெரிவித்த அதே கருத்தைத்தான் தெரிவித்தான் என்றும், ஏற்கனவே கொடுத்த வாக்குமூலம் ஒத்துப்போனதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஷ்ரத்தாவின் தலையை எங்கு போட்டாய் என்று கேட்டதற்கு, அது குறித்து போலீஸாரிடம் தெரிவித்துவிட்டதாக தெரிவித்தான். நார்கோ டெஸ்ட்டில் அவன் தெரிவித்த தகவல்கள் தொடர்பாக இன்று திகார் சிறைக்கு சென்று அஃப்தாப்பிடம் உறுதி செய்து கொள்ள போலீஸார் சென்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் வீட்டு செலவை ஏற்பதில் இருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அஃப்தாப் கடந்த மாதம் கைது செய்யப்பட்டான்.