Published:Updated:

நாமக்கல்: சிறையில் உருவான நட்பு; லாரிகளைக் கடத்திய மூன்று இளைஞர்கள்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

கடத்தப்பட்ட லாரி

குமாரபாளையம் அருகே லாரியைக் கடத்திய சிறை நண்பர்களான மூன்று இளைஞர்களை போலீஸார் கைதுசெய்து, அவர்கள் கடத்திய லாரியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல்: சிறையில் உருவான நட்பு; லாரிகளைக் கடத்திய மூன்று இளைஞர்கள்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

குமாரபாளையம் அருகே லாரியைக் கடத்திய சிறை நண்பர்களான மூன்று இளைஞர்களை போலீஸார் கைதுசெய்து, அவர்கள் கடத்திய லாரியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:
கடத்தப்பட்ட லாரி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள பல்லக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், மணல் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்றைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த 24-ம் தேதி மாலை லாரி ஓட்டுநர் முனுசாமி, தினேஷ்குமாரின் வீட்டு வாசலில் லாரியை நிறுத்திவிட்டு இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். தினேஷ்குமார் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தபட்டிருந்த லாரியைக் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்,

இந்த நிலையில், எடப்பாடிக்குச் செல்லும் சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது அந்த வழியாக வந்த காரையும் லாரியையும் நிறுத்தி ஓட்டுநரிடமும், அதில் இருந்த ஒரு நபரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது, பல்லக்காபாளையம் பகுதியில் காணாமல்போன தினேஷ்குமாரின் லாரி என்பது உறுதிசெய்யப்பட்டது.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இதையடுத்து, அவர்கள் கடத்திய லாரியையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரித் திருட்டில் ஈடுபட்டவர்கள் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த கவியரசு, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ், கோவையைச் சேர்ந்த கண்ணன் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. லாரித் திருட்டில் ஈடுப்பட்டவர்கள் சிறையில் நண்பர்களானவர்கள் என்பதும், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இதுவரை மூன்று லாரிக் கடத்தலில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைதுசெய்த போலீஸார், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.