Published:Updated:

கையொப்பம்போட வந்த காவல் நிலையத்திலேயே டிக்டாக்!- மீண்டும் சிறைக்குச் சென்ற நண்பர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 15 நாள்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனையில் ஜாமீன் வழங்கியுள்ளது.

கையொப்பம்போட வந்த காவல் நிலையத்திலேயே டிக்டாக்!- மீண்டும் சிறைக்குச் சென்ற நண்பர்கள்

இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 15 நாள்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனையில் ஜாமீன் வழங்கியுள்ளது.

Published:Updated:
கைது செய்யப்பட்டவர்கள்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதி, வினோ, மதன்குமார் ஆகிய மூவரும் சில நாள்களுக்கு முன்பு நல்லம்பள்ளியில் இரண்டு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுள்ளனர். நண்பர்களான இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 15 நாள்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனையில் ஜாமீன் வழங்கியுள்ளது. அதற்காக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு வருகின்றனர்.

கைது
கைது

இரண்டு தினங்களுக்கு முன்பு அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கையொப்பம் போட்டுவிட்டுத் திரும்பும்போது காவல் நிலையம் முன்பாக காலரைத் தூக்கிவிட்டபடி கெத்தாக நடந்து வருவதுபோல டிக்டாக் வீடியோ செய்துள்ளனர். அந்த டிக்டாக் வீடியோவில்.... யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் எங்களுக்கு என்ன பயமா... என்ற பாடல் வரிகள் வருவது காவல் நிலையத்தை இழிவு படுத்துவதுபோல இருப்பது சமூக ஊடக தளத்தில் உள்ளவர்கள் உணர்ந்ததால் இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிக்டாக் வீடியோ பார்த்த அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்குமார், ஆதி, வினோ, மதன்குமார் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism