Published:Updated:

திண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரபோஸ் வீட்டு முன்பு திரளாகக் கூடினர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ் (40). காய்கறி வியாபாரம் செய்துவரும் இவருக்கு முருகேஸ்வரி (35) என்ற மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், செளந்தர்யா (13) என்ற மகளும் இருக்கிறார்கள்.

முருகேஸ்வரி சிலுக்குவார்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் நூறு நாள் வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார். சந்தோஷ் சிலுக்குவார்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். செளந்தர்யா கரியாம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார்.

முருகேஸ்வரி
முருகேஸ்வரி

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல சந்திரபோஸ் நிலக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களுக்குக் காய்கறி வியாபாரத்துக்குக் கிளம்பினார். அப்போது அவர் காய்கறி எடைபோடும் தராசை வீட்டில் மறந்துவைத்துவிட்டு சென்றிருக்கிறார். இதையடுத்து மகன் சந்தோஷுக்கு போன் செய்து தராசை எடுத்துவருமாறு சந்திரபோஸ் கூறியிருக்கிறார். சந்தோஷ் தராசைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போதுகூட சந்தோஷ் அருகில் இருந்தவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். ஆனால் வீட்டுக்குச் சென்ற பிறகு சிறிது நேரத்தில் வீட்டை பூட்டிக்கொண்டு முருகேஸ்வரி, சந்தோஷ், செளந்தர்யா மூவரும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

 தற்கொலை
தற்கொலை
representational image

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரபோஸ் வீட்டு முன்பு திரளாகக் கூடினர். இந்தச் சம்பவத்தால் கரியாம்பட்டி பகுதியே சோகத்தில் மூழ்கியது.

தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னை: 16-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``வழக்கமான மாமியார் மருமகள் சண்டை மட்டும் இருந்திருக்கிறது. அதுவும் எப்போதாவதுதான் நடந்திருக்கிறது. கடன் பிரச்னை எதுவும் இல்லை. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் இல்லை. உறவினர்களிடமும், சுற்றுப்பகுதி மக்களிடமும் விசாரித்துவிட்டோம். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு