Published:Updated:

`ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன்!'- அக்கவுன்ட் இருக்கும் வங்கியிலேயே கொள்ளையடிக்க முயன்ற நண்பர்கள்!

மலையரசு

வழக்கமாக வங்கிக்கு வந்துசெல்லும்போது, ''உணவு இடைவேளையில் பணத்தை மொத்தமாக வைப்பார்கள்" என்பதை அறிந்துதான் உணவு இடைவேளையில் வந்தால் கொள்ளையடிக்கலாம் என அந்த நேரத்தில் வந்துள்ளனர்.

கொள்ளை
கொள்ளை

பண கஷ்டம், சொகுசாக வாழ்வதற்காக உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு டெக்னிக்குகளைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடித்த திருடர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தலைநகர் டெல்லியில் ஒரு திருடன் வித்தியாசமான முறையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்தச் சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. கடந்த 2-ம் தேதி, டெல்லி ஷாதராவில் உள்ள கோடாக் மஹிந்திரா வங்கியில் முகமூடிக் கொள்ளையர்கள் மூவர் உள்ளே புகுந்தனர்.

கொள்ளை
கொள்ளை

உணவு இடைவேளை நேரமாகப் பார்த்து வங்கியில் நுழைந்த அவர்கள், துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் காவலர்கள் அவர்களை மடக்கிப்பிடிக்க, மூவரில் இருவர் வசமாக சிக்கிக்கொண்டனர். அவர்களை போலீஸிடம் ஒப்படைத்தபோதுதான் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், ``பிரப்ஜோத் சிங் (25), சுக்தேவ் சிங் (19) ஆகியோருடன் மூன்றாவதாக ஒருநபர் சேர்ந்து வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இந்தக் கொள்ளைக்கு மூல காரணம் பிரப்ஜோத் தான். பிரப்ஜோத் துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்துள்ளார்.

சமீபத்தில் அதில் பெருத்த நஷ்டம் ஏற்படவே, நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் துப்பாக்கி கொடுத்த மூன்றாவது நபர் எஸ்கேப் ஆகிவிட்டார். இவர்தான் கொள்ளையடிக்க ஐடியா கொடுத்தது. ஹாலிவுட் திரைப்படமான `பேபி டிரைவர்'ஐ பார்த்த உத்வேகத்தில்தான் கொள்ளை முடிவுக்கு வந்து, இதற்காக நண்பர்களையும் கூட சேர்த்துக்கொண்டுள்ளார். ஏற்கெனவே இவருக்கு இந்த வங்கியில் அக்கவுன்ட் உள்ளது.

கொள்ளை அடிப்பதற்காக, ஒரு வாரத்துக்கு முன் ஒத்திகை பார்த்துள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

வழக்கமாக வங்கிக்கு வந்துசெல்லும்போது, ``உணவு இடைவேளையில் பணத்தை மொத்தமாக வைப்பார்கள்" என்பதை அறிந்துதான் உணவுஇடைவேளையில் வந்தால் கொள்ளையடிக்கலாம் என அந்த நேரத்தில் வந்துள்ளனர். அதற்காக, ஒருவாரத்துக்கு முன் ஒத்திகையும் பார்த்துள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டுள்ள 19 வயதாகும் சுக்தேவ் சிங், கல்லூரியில் படித்துவருகிறார். தலைமறைவாகியுள்ள நபரைத் தேடி வருகிறோம்" எனக் கூறியுள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.