Published:Updated:

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சந்திக்க விரும்பிய காதலி.. பல மைல்கள் கடந்து போலீஸை அதிரவைத்த இளைஞர்கள்!

காவலர்கள்
காவலர்கள்

இதை நம்பி அவர்களை விடுத்துள்ளனர் காவலர்கள். ஆனால், சிறிதுநேரம் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே ஆம்புலன்ஸ் மீண்டும் மீண்டும் சுற்றிவந்துள்ளது

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள வடகரா பகுதியில் நேற்று போலீஸார் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். லாக்டௌன் விதிகளை மீறுபவர்களைப் பிடித்து எச்சரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்திலிருந்து ஓர் ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில் மூன்று இளைஞர்கள் மட்டுமே அந்த ஆம்புலன்ஸில் இருந்துள்ளனர். இதனால் அவர்களை வழிமறித்து விசாரித்தனர் காவலர்கள். அப்போது இளைஞர்கள் மூவரும், திருவனந்தபுரத்திலிருந்து வருவதாகவும், நோயாளிகளை ஏற்றிச் செல்ல வந்துள்ளதாகவும், இது செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் என்றும் கூறியுள்ளனர். கூறியதற்கு ஏற்றாற்போலவே, மூவரும் செஞ்சிலுவைச் சங்க உடையை அணிந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சந்திக்க விரும்பிய காதலி.. பல மைல்கள் கடந்து போலீஸை அதிரவைத்த இளைஞர்கள்!

இதை நம்பி அவர்களை விடுத்துள்ளனர் காவலர்கள். ஆனால், சிறிதுநேரம் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே ஆம்புலன்ஸ் மீண்டும் மீண்டும் சுற்றிவந்துள்ளது. இதனால் போலீஸார், அவர்களை மீண்டும் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேச இதில் சந்தேகமடைந்த போலீஸ், தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது. பிடிபட்ட இளைஞர்களின் பெயர், சிவாஜித், சபீஸ், அல்போன்ஸ் என்பதும், மூவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் ஏன் ஆம்புலன்ஸில் சுற்றித்திரிந்தார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த வடகரா போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ``இந்த மூவரில் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஓர் இளம்பெண்ணுடன் பழகியுள்ளார். அந்தப் பெண் தன்னை வந்து கூப்பிட்டுச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண்ணைச் சந்தித்து, அவரை திருவனந்தபுரம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், லாக் டௌனில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சந்திக்க விரும்பிய காதலி.. பல மைல்கள் கடந்து போலீஸை அதிரவைத்த இளைஞர்கள்!

ஆனால், இங்குவந்து சிக்கிக்கொண்டனர். இது ஓர் அசாதாரண சம்பவம். லாக் டௌன் போன்ற இந்தச் சூழ்நிலையில், சிலர் அசாதாரண முறைகளைப் பயன்படுத்த முயல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுவும் ஆம்புலன்ஸை வைத்து நாடகமாடுவது வேதனையளிக்கிறது" என்று கூறியுள்ளார். பின்னர் அந்த இளைஞர்களுக்கு தகுந்த அறிவுரைகளை சொல்லிய போலீஸார், இரண்டு வாகனங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு