Published:Updated:

பயிரைக் காக்க வைக்கப்பட்ட மின்வேலி; முயல் வேட்டைக்குச் சென்ற மூவர் உயிரிழப்பு-திண்டிவனம் அருகே சோகம்

பிரம்மதேசம் காவல் நிலையம் ( தே.சிலம்பரசன் )

பன்றித் தாக்குதலிலிருந்து பயிரைக் காப்பதற்காக, சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்படடிருந்த மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய நிலத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு சடகோபன் என்பவர் குத்தகைக்குப் பெற்று, தொடர்ச்சியாக விவசாயம் செய்துவருகிறார். தற்போது, அந்த நிலத்தில் வேர்க்கடலை விவசாயம் செய்திருக்கும் சடகோபன், பன்றித் தொல்லையிலிருந்து பயிரைக் காப்பதற்காக நிலத்தைச் சுற்றி சட்டத்துக்குப் புறம்பாக 2 அடி உயரத்தில் காப்பர் கம்பிகளைக்கொண்டு மின்வேலி அமைத்திருக்கிறார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், அருகிலுள்ள வன்னிபேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய மூன்று பேரும் நேற்று (19.07.2022) இரவு அந்தப் பகுதிக்கு முயல் வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சார வேலியில் சிக்கிய மூவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், பிரம்மதேசம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், 304 A IPC., மற்றும் 135/1 (Tamilnadu Electricity Act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.