Published:Updated:

பெங்களூரு: ரூ.1.28 கோடிக்கான கள்ள நோட்டுகள் பறிமுதல்; அச்சிட்டு, புழக்கத்தில்விட்ட மூவர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு.

‘கைதானபோது, இந்த நோட்டுகளை சினிமா படப்பிடிப்புக்காகத் தயாரித்ததாக பொய் சொன்னார்கள். விசாரணையில் குற்றம் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.' – போலீஸார்

பெங்களூரு: ரூ.1.28 கோடிக்கான கள்ள நோட்டுகள் பறிமுதல்; அச்சிட்டு, புழக்கத்தில்விட்ட மூவர் கைது!

‘கைதானபோது, இந்த நோட்டுகளை சினிமா படப்பிடிப்புக்காகத் தயாரித்ததாக பொய் சொன்னார்கள். விசாரணையில் குற்றம் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.' – போலீஸார்

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு.

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே இருப்பது அத்திப்பள்ளி. இந்தப் பகுதி, தமிழக மாநில எல்லையான ஒசூர் அருகே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் சிலர் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில்விட்டு, அசல் ரூபாய் நோட்டுகளாக மாற்றிவருவதாக, மத்திய குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

மத்திய குற்ற புலனாய்வுத்துறை மற்றும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து கடந்த 31-ம் தேதி சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் அச்சிட்டது கண்டறியப்பட்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்ரமணியன் (60), பிச்சிமுத்து (48) ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்துவந்தனர். முக்கியக் குற்றவாளியான நல்லகனியை (53) தேடி வந்தனர்.

நல்லகனி
நல்லகனி

இந்த நிலையில், இன்று நல்லகனியை (53) கைதுசெய்த போலீஸார், 31-ம் தேதி முதல் இன்று வரை இவர்களிடமிருந்து, 1,28,68,000 ரூபாய்க்கான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

சுப்ரமணியன்.
சுப்ரமணியன்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், ``கைதான குற்றவாளிகள், இந்தக் கள்ள நோட்டுகளைத் தாங்களே அச்சிட்டு பெங்களூர் பகுதியில் புழக்கத்தில்விட்டு, அசல் நோட்டுகளாக மாற்றி வந்திருக்கின்றனர். கைதானபோது, இந்த நோட்டுகளை சினிமா படப்பிடிப்புக்காகத் தயாரித்ததாகப் பொய் சொன்னார்கள். விசாரணையில் குற்றம் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மேலும், யாரேனும் இவர்களுடன் குற்றத்தில் ஈடுபட்டார்களா என விசாரித்துவருகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.