Published:Updated:

சென்னை: இளம்பெண்ணுக்குத் திருமண டார்ச்சர் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது

திருமண டார்ச்சர் புகாரில் கைதானவர்

சென்னையில் இளம்பெண் ஒருவருக்குத் திருமண டார்ச்சர் கொடுத்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை: இளம்பெண்ணுக்குத் திருமண டார்ச்சர் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது

சென்னையில் இளம்பெண் ஒருவருக்குத் திருமண டார்ச்சர் கொடுத்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
திருமண டார்ச்சர் புகாரில் கைதானவர்

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் வசிப்பவர் மும்தாஜ் (பெயர் மாற்றம்). இவருக்குத் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவுசெய்திருந்தனர். அதைத் தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரசூல்கான் என்பவர், மும்தாஜிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மும்தாஜ் சம்மதிக்கவில்லை. ஆனால் ரசூல்கான் தொடர்ந்து மும்தாஜுக்குத் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். அதனால் மும்தாஜ், ரசூல்கானை பல தடவை எச்சரித்திருக்கிறார். ஆனாலும் ரசூல்கான் கேட்கவில்லை.

அன்வர்
அன்வர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து மும்தாஜ் தரப்பில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த ரசூல்கான், தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு மும்தாஜுக்குத் திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதோடு, அவரை மிரட்டியிருக்கிறார். இதையடுத்து மும்தாஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீஸார் ரசூல்கான், அவரின் நண்பர்கள் பன்னீர்செல்வம் என்கிற அன்வர் முகமது, நிஜாமுதீன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மூன்று பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான ரசூல்கானின் பெயர், கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிப் பட்டியலில் இருக்கிறது. மேலும் இவர்மீது ஒரு கொலை முயற்சி, இரண்டு மோசடி வழக்குகள் உட்பட ஏழு வழக்குகள் இருக்கின்றன. ரசூல்கானுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism