Published:Updated:

திருமணத்துக்கு மறுப்பு; விவாகரத்தான பெண்மீது ஆசிட் வீச்சு - பெங்களூரில் அதிர்ச்சி

ஆசிட் வீச்சு

``எனக்கு திருமணத்துக்குப் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்" எனக் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை கேட்டிருக்கிறார்.

திருமணத்துக்கு மறுப்பு; விவாகரத்தான பெண்மீது ஆசிட் வீச்சு - பெங்களூரில் அதிர்ச்சி

``எனக்கு திருமணத்துக்குப் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்" எனக் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை கேட்டிருக்கிறார்.

Published:Updated:
ஆசிட் வீச்சு

பெங்களூரில் விவாகரத்தான 32 வயது பெண் தன் மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்ததுடன், அதே பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியும் வந்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த அஹமத் (36) என்பவரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றிவந்திருக்கிறார். இவர்கள் இருவரும் நட்பாகப் பழகிவந்திருக்கிறார்கள். ஆனால் அது காலப்போக்கில் அஹமது மனதில் காதலாக மாறியது.

அதனால் கடந்த சில வாரங்களாக அஹமது அந்தப் பெண்ணிடம் "நாம் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நாம் திருமணம் செய்துகொள்வோம். எனக்கும் திருமணத்துக்குப் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்" எனக் கூறி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பெண், தான் விவாகரத்து ஆனவர் என்பதாலும், மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்பதாலும் அஹமதைப் புறக்கணித்திருக்கிறார்.

ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சு

இதனால் ஆத்திரமடைந்த அஹமத் நேற்று காலை அந்தப் பெண் தொழிற்சாலைக்குப் பணிக்கு செல்லும் ஜே.பி.நகர் அருகே சரக்கி சாலை சந்திப்பில் மறைந்திருந்து அந்தப் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். ஆசிட் வீச்சால் அந்தப் பெண்ணுக்கு 30% தீக்காயம் ஏற்பட்டு வலது கண் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. "அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை. அவரது பார்வையும் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் பூரண குணமடைவார் என நம்புகிறோம்" என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அஹமதை காவல்துறை தேடிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism