Published:Updated:

`யூடியூபில் ஆபாசப் பேச்சு’ - டிக்டாக் திவ்யாவைக் கைதுசெய்த தனிப்படை போலீஸ்

ஆபாசமாகப் பேசியது தொடர்பான வழக்கில் போலீஸாரிடம் சிக்காமல் இருந்து ஊர் ஊராகச் சுற்றிவந்த டிக்டாக் திவ்யாவை, பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நாகப்பட்டினத்தில் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. டிக்டாக் செயலியில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவரைப்போலவே டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவந்தவர் தஞ்சையைச் சேர்ந்த திவ்யா.

டிக்டாக் செயலிக்கு தடைவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திவ்யா யூடியூபில் ஏராளமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். இவர் வெளியிடும் வீடியோக்களில் பலவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது

திவ்யா
திவ்யா

இந்த டிக்டாக் பிரியர்கள் இருவருக்குள்ளும் கடந்த மூன்று ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்துவந்தது. தாங்கள் வெளியிடும் வீடியோக்களில் ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்வதையும் வழக்கமாகக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் காவல் நிலையம் வரை சென்று வழக்கு பதிவும் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில்தான் 2020 டிசம்பரில் சுகந்தி, `சமூக வலைதளங்களில் திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

சென்னை: `பெற்ற மகள் என்றுகூட பாராமல் அவதூறு பேசினார்!’ - டிக்டாக் பிரபலமும், அவரின் நண்பரும் கைது

அதனடிப்படையில் தேனி போலீஸார் விசாரணை நடத்தி திவ்யா ஆபாசமாகப் பேசியதை உறுதிசெய்தனர். மேலும், பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து திவ்யாவைத் தேடிவந்தனர். இதையறிந்த திவ்யா தேனி போலீஸார் தன்னைத் தேடுவதாகக் கூறி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டு தலைமறைவானார்.

கைதான திவ்யா
கைதான திவ்யா

போலீஸார் தன்னுடைய செல்போன் எண்ணைவைத்து டிராக் செய்து பின்தொடர்வதைத் தெரிந்துகொண்ட திவ்யா தஞ்சை, சென்னை, வடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார். இந்தநிலையில் நாகபட்டினத்தில் திவ்யாவைச் சுற்றி வளைத்த போலீஸார் அவரைக் கைதுசெய்து தேனி சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு, மற்றும் ஐபிசி சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திவ்யாவைச் சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு