Published:Updated:

ஆடம்பர வாழ்க்கைமீதான மோகம்; வீடுகளில் பூட்டை உடைத்துத் திருடிய டிக்-டாக் பிரபலம் கைது!

அபிமன்யூ ( Facebook )

மும்பையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வீடுகளில் பூட்டை உடைத்துத் திருடிய டிக்-டாக் நட்சத்திரம் கைதுசெய்யப்பட்டார்.

ஆடம்பர வாழ்க்கைமீதான மோகம்; வீடுகளில் பூட்டை உடைத்துத் திருடிய டிக்-டாக் பிரபலம் கைது!

மும்பையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வீடுகளில் பூட்டை உடைத்துத் திருடிய டிக்-டாக் நட்சத்திரம் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
அபிமன்யூ ( Facebook )

மும்பை குர்லாவில் கடந்த வாரம் யாசின் மொகமத் என்பவரது வீட்டில் மர்மநபர் ஒருவர் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி ஆபரணங்களைத் திருடிச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது திருடிய நபர் தலையில் தொப்பி அணிந்துகொண்டு முகக்கவசம் அணிந்திருந்தார். இதனால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸார் தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஓர் இடத்தில் திருடன் தனது முகக்கவசத்தை கழற்றினான். அவன் யார் என்று ஆய்வுசெய்ததில் இதற்கு முன்னர் டிக்டாக் செயலியில் பிரபலமாக இருந்த அபிமன்யூ குப்தா என்று தெரியவந்தது. தற்போதும் அபிமன்யூ சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

அபிமன்யூ
அபிமன்யூ

சிசிடிவி காட்சிகளைவைத்து அவரைக் கைதுசெய்ய போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது, அபிமன்யூ குர்லா வரவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே அவரை மடக்க திட்டம் தீட்டினர். அபிமன்யூ குர்லா வந்தபோது அவரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திருடியதை ஒப்புக்கொண்டார். மும்பையில் மட்டும் 15-க்கும் அதிகமான வீடுகளில் திருடியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

அவர் வீட்டைச் சோதனை செய்தபோது நான்கு சாக்கு மூட்டைகள் நிறைய காலணிகளும், ஷூக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அபிமன்யூ வீடுகளுக்கு வெளியில் கிடக்கும் செருப்பு, ஷூக்களைக்கூட திருடிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் அபிமன்யூ திருடிய பணத்தில் சூதாடுவது, ஆடம்பரமாகச் செலவிடுவது, விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். அவரிடமிருந்து 14 மொபைல் போன்கள், வெளிநாட்டு கரன்சி, போலி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism