Published:Updated:

கடையில் மாயமான செல்போன்; டிப்-டாப் திருடனுக்கு அறிவுரை கூறிய உரிமையாளர்!

சிசிடிவி-யில் சிக்கிய டிப்-டாப் ஆசாமி

``திருடிய செல்போனை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்" என கடை உரிமையாளர் திருடனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

கடையில் மாயமான செல்போன்; டிப்-டாப் திருடனுக்கு அறிவுரை கூறிய உரிமையாளர்!

``திருடிய செல்போனை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்" என கடை உரிமையாளர் திருடனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

Published:Updated:
சிசிடிவி-யில் சிக்கிய டிப்-டாப் ஆசாமி

ராமநாதபுரம் அருகே தெற்கு வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் கலை கதிரவன். இவர் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே `லஸ்ஸி ஸ்பாட்' எனும் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் அவரது குளிர்பான கடைக்கு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து 'டிப் டாப்பாக' வந்த ஒருவர் கூல்டிரிங்க்ஸ் ஆர்டர் செய்து குடித்துள்ளார்.

பின்னர் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த கடை உரிமையாளரிடம் குடித்த கூல்டிரிங்க்ஸ்-க்கான பணத்தைக் கொடுத்த அந்த நபர், அந்த டேபிலில் இருந்த செல்போனை நைசாக திருடி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு செல்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திருடனுக்கு முகநூலில் அறிவுரை கூறிய கடை உரிமையாளர்
திருடனுக்கு முகநூலில் அறிவுரை கூறிய கடை உரிமையாளர்

டேபிளில் இருந்த செல்போன் மாயமானது தொடர்பாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவை கடை உரிமையாளர் கலை கதிரவன் ஆய்வு செய்தபோது, டிப்-டாப்பாக கூல்டிரிங்க்ஸ் குடிக்க வந்த நபர் செல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கலை கதிரவன் அந்த பதிவில், ``செல்போன் திருடிய திருடர் கவனத்திற்கு, நீங்கள் திருடிய செல்போனின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ.2,500 மட்டுமே. ஆதலால் தயவு செய்து விற்க முயற்சிக்க வேண்டாம். வேண்டுமென்றால் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு முகநூல்வாசிகளை நகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.