விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, வீரசோழன் அருகேயுள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் ஆனந்தராஜ் (30). இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி வழக்கம்போல் வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. எப்போதுமே, திடீரென வெளியே செல்லும் பழக்கம்கொண்ட ஆனந்தராஜ், அதிகபட்சம் மறுநாள் வீட்டுக்கு வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், 16-ம் தேதி வெளியே சென்ற அவர், தொடர்ந்து மூன்று நாள்களாக வீடு திரும்பவில்லை. அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் பதற்றமடைந்த பெற்றோர், அவரைப் பல இடங்களிலும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் பலன் கிடைக்காததால் வீரசோழன் காவல் நிலையத்தில் தங்களது மகன் ஆனந்தராஜைக் கண்டுப்பிடித்து தரக் கோரி, அவரின் தந்தை சந்திரன் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வீரசோழன் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் விருதுநகர் - ராமேஸ்வரம் மாவட்ட எல்லையில் பாப்பாங்குளம் எனும் கிராமத்தில் உள்ள மயானத்தின் கருவேலங்காட்டுக்குள் சந்தேகப்படும்படி இரண்டு பேர் பதுங்கியிருப்பதாக வீரசோழன் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் பதுங்கியிருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்களை அவர்கள் வாக்குமூலமாக அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸ் விசாரணையில் பிடிப்பட்டவர்கள், தரைக்குடியைச் சேர்ந்த வசந்தப்பாண்டி (22), முத்து இருளாண்டி (19) என்பதும் அவர்கள் உட்பட ஐந்து பேர் சேர்ந்து மூன்று நாள்களுக்கு முன்பாக பாப்பாங்குளத்தைச் சேர்ந்த ஆனந்தராஜைக் கழுத்தைத் துண்டித்துக் கொலைசெய்ததாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், மூன்று நாள்களுக்கு முன்பாக ஆனந்தராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து பாப்பாங்குளம் மயானத்தில் வைத்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படவும், "வீட்டிலிருந்து அரிவாளை எடுத்துட்டு வந்து உங்க எல்லாத்தையும் வெட்டுறேன் பாரு' என்று ஆனந்தராஜ் ஆவேசமானதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த உடனிருந்தவர்கள், ஆனந்தராஜைப் பிடித்து கீழே தள்ளி கத்தியால் அவரது கழுத்தை அறுத்து தலையைத் துண்டித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், வெளியே சென்றால் போலீஸிடம் மாட்டிக்கொள்வோம் என பயந்தே வசந்தப்பாண்டியும், முத்து இருளாண்டியும் கருவேலங்காட்டுக்குள் பதுங்கிக்கிடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் போலீஸிடம் அவர்கள் சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் உடல் அழுகிய நிலையில் ஆனந்தராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, இந்தக் கொலைச் சம்பவம் நடந்த பாப்பாங்குளம் மயானப்பகுதியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து, ஆனந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வீரசோழன் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து வசந்தப்பாண்டி, முத்து இருளாண்டி, சசிக்குமார், சிலம்பு ஆகிய நான்கு பேரை கைதுசெய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் இருளன் என்பவரைத் தேடிவருகின்றனர்.