Published:Updated:

`அந்த நபரை அடித்தே கொன்றுவிட்டார்கள்!’ -சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் கொந்தளித்த உறவினர்கள்

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டது, திருப்பத்தூரில் நடந்துள்ளது.

கொல்லப்பட்ட சந்தோஷ்
கொல்லப்பட்ட சந்தோஷ்

திருப்பத்தூரை அடுத்த நத்தம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவரின் மகன் சந்தோஷ் (25). வீடுகளுக்கு தகர மேற்கூரை அமைக்கும் வேலை செய்துவந்தார். நேற்று மாலை, அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

க்ரைம்
க்ரைம்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமியை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் ஆத்திரத்தில் இருந்த சிறுமியின் உறவினர்கள், சந்தோஷைத் தேடினர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்

பின்னர், நத்தம் பகுதியில் உள்ள தோட்டத்தில் அந்த இளைஞர் அடித்துக் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவர் அணிந்திருந்த சட்டை, அருகிலிருந்த சிறிய மரத்தின் அடிக் கிளையில் மாட்டப்பட்டு, கழுத்தில் சுற்றிவிடப்பட்ட நிலையில் இருந்தது.

`படிக்க வைக்கிறோம்; நல்லா பாத்துக்கிறோம்!’ -உறவினர்களால் 9 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சந்தோஷின் சடலத்தைக் கைப்பற்றிய கந்திலி போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார்
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார்

இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாரிடம் பேசினோம். ‘‘ பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த இளைஞர் கொலைசெய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என விசாரணை நடக்கிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும்’’ என்றார்.