Published:Updated:

'உங்க மகன் உசுரோட வேணும்னா 3 கோடி ரூபாய் பணத்தோட வாங்க!' - திருப்பூரில் நடந்த கடத்தல் சம்பவம்!

மாதிரி படம்
மாதிரி படம்

நடுரோட்டில் காரை மறித்து காரிலிருந்தவர்களைச் கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பிரபல அரிசி ஆலையை நடத்திவரும் தொழிலதிபர் அவர். நேற்று மதியம் காங்கேயத்திலிருந்து வீரசோழபுரத்துக்கு காரில் சென்றிருக்கிறார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அரிசி ஆலைத் தொழிலதிபர் சென்ற காரை வழிமறித்திருக்கிறது. பதறிப்போன தொழிலதிபர் சுதாரிப்பதற்குள், காரிலிருந்த தொழிலதிபரின் மகனையும் கார் டிரைவரையும் அந்த மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றிருக்கிறது.

மாதிரி படம்
மாதிரி படம்
கஞ்சா கடத்தல் கார்; உயிரைப் பணயம்வைத்து விரட்டிய போலீஸ்; திருச்சியில் திக்திக் சம்பவம்!

இதில் நிலைகுலைந்துபோன தொழிலதிபர் என்ன செய்வதெனத் தெரியாமல் கதறியபடி நின்றிருக்கிறார். சிறிது நேரத்திலேயே தொழிலதிபரை போனில் தொடர்புகொண்ட அந்த மர்ம நபர்கள், ``உங்க பையன் உசுரோட வேணும்னா 3 கோடி ரூபாய் பணத்தோட நாங்க சொல்ற இடத்துக்கு வாங்க’’ எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3 கோடி ரூபாய் பணத்தைத் தயார் செய்துவிட்டு மதுரைக்கு வரச் சொல்லியிருக்கிறது கடத்தல் கும்பல்.

3 கோடி ரூபாய் போனாலும் பரவாயில்லை. பையனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென, அந்தத் தொழிலதிபர் போலீஸுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறார். 3 கோடி ரூபாய் பணத்தைத் தயார் செய்துவிட்டு கடத்தல் கும்பலிடம் தொழிலதிபரிடம் பேச, பணத்தை எடுத்துக்கொண்டு மதுரைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். பணத்தோடு மதுரைக்குச் சென்ற தொழிலதிபர், அந்தக் கடத்தல் கும்பலிடம் 3 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து மகனை மீட்டு வந்திருக்கிறார். இந்த விவகாரம், போலீஸாரின் காதுகளுக்கு எட்ட, சம்பந்தப்பட்ட தொழிலதிபரை புகார் கொடுக்கவைத்தும், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்தும் கடத்தல் கும்பலைப் பிடிக்கும் முயற்சி இறங்கியிருக்கின்றனர். அதிரடியாக இறங்கித் தேடிய போலீஸாரின் விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் பிடிபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொழிலதிபர் மகனைக் கடத்திய கடத்தல் கும்பல் யார்... இதில் யார் யாருக்குத் தொடர்பு இருக்கிறது... என்ன காரணத்துக்காக இதைச் செய்தனர் என்பவை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு