Published:Updated:

திருமணம் தாண்டிய உறவால் நேர்ந்த கொடூரம்?! - திருப்பூரை அதிரவைத்த தாய், மகன்கள் கொலை

திருப்பூர் கொலை

திருப்பூர் அருகே தாயுடன் இரண்டு மகன்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் தாண்டிய உறவால் நேர்ந்த கொடூரம்?! - திருப்பூரை அதிரவைத்த தாய், மகன்கள் கொலை

திருப்பூர் அருகே தாயுடன் இரண்டு மகன்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
திருப்பூர் கொலை

திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இரண்டு சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, மூன்று பேரும் கொலைசெய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

 கொலை
கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முத்துமாரியுடன் அவர் மகன்கள் தர்ணீஷ், நித்தீஷ் ஆகியோரும் அந்த வீட்டில் இருந்திருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி வந்துசெல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது. நேற்றும் அந்த நபர் முத்துமாரி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

திருப்பூர் கொலை
திருப்பூர் கொலை

அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த நபர் மட்டும் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். எந்தச் சத்தமும் வராததால் அக்கம் பக்கத்தினர் முத்துமாரி வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதுதான் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை
சித்திரிப்புப் படம்

ஏற்கெனவே திருமணமான முத்துமாரி, கணவனைப் பிரிந்து அந்த நபருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் காவல் ஆணையர் பாபு விசாரணை செய்தார். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளியைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism