Published:Updated:

`என்னை யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டான்'- கைவிட்ட காதலன்; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

காதலன் ஏமாற்றியதால், திருப்பூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிருந்தா
பிருந்தா

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி- சாரதாமணி என்பவரின் மகள் பிருந்தா. இவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (24). இவர் தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். பிருந்தா, சந்தோஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிருந்தா, சந்தோஷ் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பிருந்தாவின் தாய் பார்த்துவிட்டார். அதுகுறித்து சாரதா மணி கேட்டதற்கு, `நாங்கள் இருவரும் காதலித்துவருகிறோம்' என்று பிருந்தா கூறியுள்ளார்.

சந்தோஷ்
சந்தோஷ்

மேலும், தனது பெற்றோரிடம் சந்தோஷை அழைத்துச் சென்றுள்ளார் பிருந்தா. அப்போது சந்தோஷ், பிருந்தாவை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

`சொந்த நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள்!'- திருச்சியில் ஒரேநேரத்தில் தற்கொலை முடிவை எடுத்த 19 அகதிகள்

தாய் முன்னிலையில் சந்தோஷ் அப்படி கூறியதால், பிருந்தா அதிர்ச்சியடைந்தார். பின்னர் மீண்டும் சந்தோஷை கைபேசி மூலம் அழைத்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், மனமுடைந்த பிருந்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

பிருந்தா
பிருந்தா

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பிருந்தா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பிருந்தாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழப்பதற்கு முன்பு பிருந்தா, ``சந்தோஷ் என்னை யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டான். நல்லா.. நம்ப வெச்சு ஏமாத்திட்டான். அதனாலதான் தற்கொலை முயற்சி பண்ணேன்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.