Published:Updated:

`கருவேல மரத்தில் இளம்பெண் உடல்; காதலன் தலைமறைவு?!' - தற்கொலையா... கொலையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கருவேல மரத்தில் இளம்பெண் உடல்
கருவேல மரத்தில் இளம்பெண் உடல்

இளம்பெண்ணின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததாலும்,  வேலைக்குச் செல்லும்போது அவர் எடுத்துச் சென்ற செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருள்கள் சம்பவ இடத்தில் இல்லாததாலும், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகள் ஜெயஸ்ரீ (22). பி.பி.ஏ பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்காலமாக ஜெயஸ்ரீயும், அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞரும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயஸ்ரீ, இளவரசனைக் காதலிப்பதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், இளவரசனின் பெற்றோர் ஜெயஸ்ரீ பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்திருக்கிறார்களாம்.

இளம்பெண் ஜெயஸ்ரீ
இளம்பெண் ஜெயஸ்ரீ

இளவரசன் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, ஜெயஸ்ரீயைக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிலிருந்து வழக்கம்போல் வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ, வீட்டிலிருந்து வெளியேறிய சில மணி நேரங்களிலேயே அருகிலுள்ள முட்புதரில் கருவேலமரம் ஒன்றில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், கருவேலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்த தங்கள் மகள் ஜெயஸ்ரீயைக் கண்டு கதறி அழுதபடி, சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கருவேலமரத்தில் துப்பட்டாவைப் பயன்படுத்தித் தூக்கிட்டுக்கொண்ட இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், இளம்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் அவர் காதலித்துவந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர்மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அம்மாவை இழந்த சோகம்; 20 வயது இளைஞர் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை!

அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இளவரசனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த மப்பேடு போலீஸார், அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அதேபோல், இளம்பெண்ணின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததாலும், வேலைக்குச் செல்லும்போது அவர் எடுத்துச் சென்ற செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருள்கள் சம்பவ இடத்தில் இல்லாததாலும், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

இதற்கிடையில், போலீஸார் தன்னைத் தேடி வரும் தகவலறிந்து, இளவரசன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உயிரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகிப்பதாகப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், இளம்பெண்ணின் மரணம் கொலையா... தற்கொலையா... என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு