Published:Updated:

`காதலில் விழ வைத்து வீடியோ எடுத்த கும்பல்!' - திருவள்ளூர் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த 3 புகார்கள்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( மாதிரி படம் )

காதலிப்பதாகக் கூறி மாணவிகள், பெண்களைத் தங்களின் வலையில் விழ வைத்த கும்பல், அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை திருவள்ளூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தரப்பினர் மற்றும் கல்லூரி மாணவிகள் 2 பேர் அதிர்ச்சிப் புகார்களைக் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து புகார் கொடுத்தவர்களிடம் தனித்தனியாக போலீஸார் விசாரித்தனர். அதன்பேரில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கார்த்திக் (26) என்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாதுளை ஜூஸில் மயக்க மருந்து; பாலியல் தொல்லை! -`நாங்களும் நல்லவுங்கத்தான்' படத்தின் ஹீரோ கைது
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பந்தாவாக டூவீலரில் ஊரைச் சுற்றி வருபவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை கார்த்திக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதனால் அந்த மாணவி, கார்த்திக்கை முழுமையாக நம்பியுள்ளார். இருவரும் பைக்கில் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்தச் சமயத்தில் மாணவியைத் திருமணம் செய்வதாகக் கூறிய கார்த்திக், அவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். அதை மாணவிக்குத் தெரியாமல் தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

இதையடுத்து மாணவியிடம் வீடியோவைக் காட்டிய கார்த்திக், அவரை மிரட்டியுள்ளார். அதனால் கார்த்திக், சொல்வதைக் கேட்கும் நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார். அந்த மாணவியைத் தன்னுடைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச் சமயத்தில் மாணவியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட அவரின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அப்போதுதான் மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார். அதைக் கேட்டு மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

`நீதானே பொண்ணுங்கள அப்படிப் பண்ணுன!'- சிறையில் மோதிக்கொண்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்?
கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்
கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்

பின்னர், அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்துள்ளோம். அவர் கைதான தகவல் வெளியானதும் அவரின் நண்பர்கள் தலைமறைவாகிவிட்டனர். 10-ம் வகுப்பு மாணவியின் தரப்பினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து கல்லூரியில் பயிலும் 2 மாணவிகளும் கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்கள் மீது புகாரளித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``கைது செய்யப்பட்ட கார்த்திக் அளித்த தகவலை வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளோம். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோதுதான் 10-ம் வகுப்பு மாணவியைத் தவிர இன்னும் சில பெண்களுடன் கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்கள் இருக்கும் வீடியோக்கள் இருந்தன.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதுதொடர்பாகக் கார்த்திக்கிடம் விசாரித்தபோது சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் என அனைவரிடமும் அன்பாகப் பழகுவேன். பின்னர், செல்போன் நம்பர்களை வாங்கி அவர்களுடன் பேசுவேன். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் சேட்டிங் செய்வேன். அதன்பிறகு காதலிப்பதாகக் கூறி வலையில் விழ வைப்பேன் எனக் கூறியுள்ளார். கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் மாணவிகளிடமும் ரகசியமாக விசாரித்து வருகிறோம். இதுவரை 3 புகார்கள் வந்துள்ளன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு