Published:Updated:

திருவள்ளூர்: காரில் வந்த 8 பேர் கும்பல் - நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!

கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்
கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

திருவள்ளூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவர் பைக்கில் திருவொற்றியூரிலிருந்து பொன்னேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இலவம்பேடு அருகே சரவணன் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக காரில் வந்த எட்டுப் பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்தக் கும்பல், சரவணனைக் அரிவாளால் வெட்டியது. அதனால் நிலை தடுமாறிய அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

சரவணனின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானா: 18 முறை போன்; ரூ.45 லட்சம்; 9 வயது சிறுவன் கொலை!- ஸ்கைப் காலில் சிக்கிய மெக்கானிக்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலை குறித்து விசாரித்தனர். பின்னர் சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சரவணனைக் கொலை செய்த கார் சென்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

கொலை
கொலை
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சரவணன் கொலை குறித்து விசாரணை நடந்துவருகிறோம். அவரின் கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் சரவணன் ஈடுபட்டு வந்ததால், தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. மேலும், சரவணனின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு